Header Ads



பிரான்சில் வடமாகாண முஸ்லிம்களின் '27ம் கருப்பு ஒக்டோபர்' அனுஸ்டிப்பும், சர்வதேச ஒன்றுகூடலும்


இலங்கை வடமாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழந்துவந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஈழப் போராட்டம் எனும் பெயரில் LTTE பயங்கரவாதிகளினால் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக ஆயுதமுனையில் பலவந்தமாக தமது சொந்த மண்ணிலிருந்து 24 மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் கடந்து விட்டன.

இலங்கை வரலாற்றில் கறையேற்படுத்திய இந்நிகழ்வானது வடமாகாண முள்லிம்களதும் ஏனய மாகாண முஸ்லிம்களதும் மனதில் எழுதப்பட்ட குருதிவர்ண வரலாறாகும்.

வரலாற்றை மறக்கும் சமுதாயம் தன் இருப்பை இழக்கும் என்பர். வரலாற்றில் நிகழ்ந்த தவறுகளை மன்னிக்கலாம், ஆனால் மறக்கலாகாது.

தம் இருப்பை வளப்படுத்த LTTE இனர் சகோதர சமுதாயத்தை கருவறுத்த இந்த வரலாற்றுத் துரோகம் அவ்வளவு எளிதில் மறந்துபோகக் கூடியதல்ல. 

1990 ஒக்டோபர் மாதம், காலம்காலமாக வடபுலத்து முஸ்லிம்கள் உழைத்த உழைப்புக்கள், சேமித்த செல்வங்கள், கட்டிக்காத்த கலாசாரங்கள், பேணிவந்த விழுமியங்கள், மனமாறக் கட்டியெழுப்பிய மனைகள், துள்ளித்திரிந்த தெருக்கள், அரிச்சுவடி படித்த பள்ளிக்கூடங்கள் என அனைத்தையும் பறித்துக் கொண்டு, டுவுவுநு ஆயுத தாரிகள் நிராயுத பாணிகளான முஸ்லிம்களை விரட்டிய அந்த கோர நிகழ்வு இலங்கை வரலாற்றின் கருப்பு ஒக்டோபர் என்றால் அது தவறாகாது. 

இந்த கோர நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தமது பூர்வீக இடங்களில் தங்கு தடையின்றி மீள் குடியேறவும், சுதந்திரமாக வாழவும், அரசியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் பழிதீர்;க்கப்படாமலிருக்கவும், வடமாகாண முஸ்லிம்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படுவதற்காகவும் இந்த ஞாபகார்த்த நிகழ்வு இன்றியமையாததாகின்றது.

சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்களின் கடந்தகால இழப்புக்களை எடுத்துக்காட்டவும், நிகழ்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை நீக்கவும் JMC - I  அமைப்பு இரண்டாவது வருடமாக பிரான்சில் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து ஒத்துழைப்பு வழங்குவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தார்மீகக் கடமையாகும்.

காலம்: 29-10- 2017

நேரம்: 17:00 – 20:30

இடம்: UFB Centre, 91 Av.Paul Vaillant Courtiere,  La Courneuve.


எல்லாம் வல்ல அல்லாஹ் எமது முயற்சிகளை அங்கீகரிப்பானாக!


No comments

Powered by Blogger.