Header Ads



தலதா மாளிகைக்கு 26 கோடி செலவில் யானை - கொள்வனவில் பெரும் ஊழல்

தலதா மாளிகைக்கு 26 கோடி செலவில் யானையொன்று கொள்வனவு செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக தனிநபர் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டில் மியன்மார் நாட்டில் இருந்து 26 கோடி ரூபாய் செலவில் கண்டி தலதா மாளிகைக்கு யானையொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது, கேள்விப் பத்திர நடைமுறைகளை புறம் தள்ளி யானை கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

திறந்த சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் குறைவாக யானையொன்றைக் கொள்வனவு செய்வதற்கான சாத்தியம் இருக்கையில் , பாரிய தொகை செலவழித்து மியன்மாரில் இருந்து யானையொன்றைத் தருவித்த சம்பவத்தில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான சமந்த குணசேகர என்பவர் இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் சம்பவம் தொடர்பில் விசாரிக்க தனிநபர் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளின் முடிவில் யானை கொள்வனவு விடயத்தில் பாரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை தற்போது நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

3 comments:

  1. Sri lankan people are facing many problem for food ect. But they baught elephant for 26 crores.what a unjustice. How many families in hill country side suffering without home. This money will help for them

    ReplyDelete
  2. கிராமம் கிராமமா வீடுகளையும் பயிர்களையும் அழித்து நாசம் செய்யும் யானைக்கூட்டங்கள் இங்கிருக்கையில் ஊழலுக்காகவே இறக்குமதி செய்கின்றனர். ஊழலூடாக உழைக்க வெளிநாட்டிலுள்ள புலிகளை இறக்குமதி செய்யாமல் விட்டாலே போதும்ப்பா.

    ReplyDelete
  3. corruption in 2007 and report handed over to minister in 2017. this delay of 10 years is worse than corruption. anyhow our country will never prosper. that is for sure.

    ReplyDelete

Powered by Blogger.