Header Ads



இலங்கையில் 24 ஹெலிகொப்டர்களை அம்பியூலன்ஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டம்


இலங்கையில் வான்வழி அம்பியூலன்ஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

திடீர் விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில், உயிராபத்துகளைக் குறைத்து கொள்ளும் நோக்கில், இந்தச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதென, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில், நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில், உரிய பாதுகாப்பு முறை ஒன்று இல்லாமையினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில், இவ்வாறான நோயாளர்கள், முச்சக்கர வண்டியிலேயே அழைத்து செல்லப்படுகின்றனர்.

“இதன் காரணமாகவே அம்பியூலன்ஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கொழும்பு மற்றும் தென் பகுதியில் 88 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் அவசர விபத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில், நல்ல முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுத்து செல்லப்படுகிறது.

“அடுத்த வருடம் முதல் இந்த இந்திய அம்பியூலன்ஸ் சேவையை, மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 250 அம்பியூலன்ஸ் வண்டிகளை இதனுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“திடீர் அனர்த்தங்களின் போது, தரை மற்றும் வான் வழிச் சேவைகளை முன்னெடுக்க வேண்டியமு மிகவும் அவசியமாகும். இதற்காக 24 ஹெலிகொப்டர்கள், 1,025 அம்பியூலன்ஸ், விபத்துகளுக்கான 24 வாகனங்கள் பெற்றுக்கொடுக்க ஜேர்மன் அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது. இருப்பினும், முதலில் நாம் விபத்து வாகனங்கள், ஹெலிகொப்டர்களையே பெற்றுக்கொண்டோம். இலங்கையில் தற்போது காணப்படும் வாகன நெரிசல் காரணமாக, அத்தருணத்தில் அம்பியூலன்ஸ் வண்டிகள் அவ்வழியே செல்ல முடியாது. இதனால், அவசர அனர்த்த சந்தர்ப்பத்தில், வான்வழி சேவையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்ட்டுள்ளது” என்றார்.

1 comment:

  1. ANOTHER 24 HELICOPTERS FOR POLITICIANS AND POLITICAL LEADERS TO TRAVEL FOR POLITICAL ACTIVITIES/PROPAGANDA MEETINGS. UNDER THE PRETEXT OF THE NEED FOR EMERGENCY SERVICES, RAJITHA THE "CUNNING WOLF" - BETTER THAN JR, IS PLANING THIS. THERE WILL DEFINITELY BE A 'SPECIAL CLAUSE" EMBEDDED IN THE USAGE PARA THAT FOR URGENT NEEDS THESE HELICOPTERS CAN BE USED BY POLITICIANS FOR ADMINISTRATIVE TRAVEL WITHIN THE COUNTRY. AND THERE WE GO, THESE SCOUNDRELS WILL ENJOY JOLLY RIDES IN HELICOPTERS TOO IN THE COMING YEARS. THESE SERVICES WILL BE ESPECIALLY MADE AVAILABLE TO THE TNA MP's WHO HAVE NOW BECOME THE KING MAKERS OF THE "YAHAPALANA GOVERNMENT".
    "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.