Header Ads



கல்முனையை 2 ஆக பிரிக்காதே, 4 ஆக பிரி


(எஸ் .எல். அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபையினை இரண்டாக பிரிக்க முயலும் செயடற்பாட்டினை   கண்டித்து  கல்முனை அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனம்களின் சம்மேளனத்தினால்  ஏட்பாடு செய்யப்பட்ட அமைதி பேரணியும், மகஜர் கையளிப்பு நிகழ்வும் இன்று (31)கல்முனையில் இடம்பெற்றது.

இதற்கமைவாக கல்முனை மாநகர சபையினை  பிரிக்கப்படக்கூடாது  என்றும்  அவ்வாறு பிரிப்பதாயின் 1987ஆம் ஆண்டு கலப்பகுதில் காணப்பட்டதனை போன்று நான்கு உள்ளுராட்சி அலகுகளாக  பிரிக்கப்பட வேண்டும் எனும் தொனிப்பொருளில் அமைந்த பல பதாகைகள்  பேரணியில் கலந்துகொண்டவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டது. 

கல்முனை முகையதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக ஆரம்பிக்கப்படட இந்த அமைதி பேரணி  கல்முனை பிரதேச செயலகத்தை சென்றடைந்ததுடன், கல்முனை பிரதேச செயலாளர் எச்.எம்.முஹமட் ஹனியிடம்  மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது

2 comments:

  1. வடகிழக்கு இணைப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு எட்டப்படும் ஆபத்துக்கு ஒப்பானதுதான் கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருதை மாத்திரம் பிரித்தெடுப்பது. இந்த விடயம் இந்தளவிட்கு பெரிதாக பூதாகாரம் ஆவதற்கு காரணம் எமது அரசியல் தலைமைகளின் சித்த விளையாட்டுக்களே.

    ReplyDelete
  2. கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாக நாமே களம் அமைத்துக்கொடுத்துவிட்டோம். நமது மூன்று பெற்றறி டோச் சிந்தனைக்குப் படாதிருத்த விடயத்தை அன்று அதாவுல்லா தனது ஆறு பெற்றறி டோச் சிந்தனை மூலம் நான்காக பிரிக்கும் தந்திரத்தை காதும்காதும் வைத்தாற்போல் செய்வதாக குறிப்பிட்டதை நாம்தான் ஊர்வாதம் அரசியல்வாதம் பிரதேசவாதம்பேசி தலையில் மண்ணைவாரி இறைத்துக்கொண்டோம்.

    ReplyDelete

Powered by Blogger.