Header Ads



கனத்த இதயத்துடன் 1990 கருப்பு நாளை, ஞாகப்படுத்திய யாழ்ப்பாண முஸ்லிம்கள் (படங்கள்)


-பாறுக் ஷிஹான்-

1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் நினைவுநாள் அனுஷ்டிப்பை இன்று(30)  காலை 8 மணியளவில் யாழ் ஐந்து சந்தி பகுதியில் அனுஸ்டித்தனர்.

இதன் போது அப்பகுதியில்  கடும் மழைக்கு மத்தியிலும்  ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள்  ஒக்டோபர்  30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம்  ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும்இதமது  சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது  வாழ்ந்துவருகின்றனர் .

எனவே அவர்களை  சொந்தமண்ணில்  இன்றுடன் 27 வருடங்கள் கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளை மதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை  ஆறாத்துயரமாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

எனவே தான்  எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என இதன் போது ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.




No comments

Powered by Blogger.