October 23, 2017

1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர் - ஐ.நா விசேட நிபுணர்


யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது.  அதனை  நீதிமன்றமே  தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை  இவ்வாறு  பாதுகாப்பதாக  கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை  மீறுவதைப் போன்றதாகும் என்று  இலங்கை்கான விஜயத்தை முன்னெடுத்த உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள் நிகழாமை தொடர்பான  ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப்  தெரிவித்தார். 

இலங்கைக்கு 14  நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள் நிகழாமை தொடர்பான  ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று  தனது  இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பில் நேற்று  ஊடகவியலாளர்களை சந்தித்து தனது மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.  

ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்   செய்தியாளர் சந்திப்பில் 23.10.2017 மேலும்  குறிப்பிடுகையில்:

வடக்கு கிழக்கு தெற்குக்கு விஜயம்  செய்தேன்.

நான் இலங்கைக்கு ஐந்தாவது தடவையாக விஜயம் செய்து பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயங்களை ஆராய்ந்திருக்கின்றேன்.   நான் இம்முறை அளுத்கம, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார்,  மாத்தறை,  முல்லைத்தீவு, புத்தளம், மற்றும் திருகோணமலை  ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தேன். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தாரையும் சந்தித்து கலந்துரையாடினேன். 

யார் யாரை சந்தித்தேன்? 

கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்,  சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், தேசிய சகவாழ்வு,  அரசகரும மொழிகள் அமைச்சர்,  சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம்,  இந்துசமய விவகார அமைச்சர், நீதி அமைச்சர், கல்வி அமைச்சர், ஜனாதிபதி செயலாளர்,  பாதுகாப்பு செயலாளர்,  சபாநாயகர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர்,  இராணுவத்தளபதி,  கடற்படை தளபதி, விமானப்படைத்தளபதி, தேசிய  புலனாய்வு சேவை தலைமை அதிகாரி, பொலிஸ்மா அதிபர், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் தலைவர், நல்லிணக்கத்தை கூட்டிணைப்பதற்கான செயலகத்தின் செயலாளர்,  மனித உரிமை  ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், பொலிஸ் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள்,  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இராஜதந்திர முக்கியஸ்தர்க்ள், கல்வியாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, மற்றும் கிழக்குமாகாண ஆளுநர்கள்,  உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.  எனக்கு  முன்னர்  இலங்கைக்கு  பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐ.நா. நிபுணர்கள் வருகை தந்துள்ளனர்.  அவர்களின் விடயங்களையும் நான் கவனத்தில் எடுத்துள்ளேன். 

அடுத்ததாக  காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்திற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது ஒரு சுயாதீனமான நியமனமாக இருக்கும் என கருதுகின்றேன்.  நம்பகரமானவர்களை இதற்கு நியமிக்கவேண்டும்.  

விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 

பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதாக   பொறுப்புக்கூறல் பொறிமுறை அமையும்.   பாதிக்கப்பட்ட அனைவரும் நீதியை எதிர்பார்க்கின்றனர்.  600 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும்  நீதி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன்  1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள்  யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக  விரட்டப்பட்டனர்.  இவ்வாறு  பட்டியல் நீள்கின்றது. இதுவொரு  முடிவில்லாத  பட்டியல் என்றே  கூறலாம்.  

7 கருத்துரைகள்:

யாழில் இருந்துமட்டுமல்ல வடக்கிலிருதே முஸ்லீம்கள் விரட்டப்பட்டார்கள் என்ற விடயம் நியுணரிடம் சுட்டிக்காட்டப்படல்வேண்டும்

அ......தோனி, இத்தலைப்புக்கு நாங்களும் well done கூறலாம்.

(1) UN சொல்வது அவ்வளவும் 100% உண்மை.
UN சொல்பவை எல்லாவற்றையும் இலங்கை விரைவில் நிறைவேற்ற UN மேலும் அதி உச்ச அழுத்தங்களை இலங்கை அரசுக்கு கொடுக்கவேண்டும்.

தமிழர்கள் தமக்கு விரும்பியவாறு தீர்வுகள் பெற இவற்றையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம்.

(2) வடக்குப்பகுதியில் இருந்து முஸ்லிம்கள் "பலவந்தமாக விரட்டப்பட்டனர்",. ("இனவழிப்பு செய்யப்படடனர் என கூறுவதை UN மறுத்துவிட்டது - இது முக்கியமான சொல் பதம்).இவர்களை விரட்டிய Llte இப்போது இல்லை.

Ltte உருவாக காரணமான (சில நாட்களுக்கு முன் றிசாத் ம் குறிப்பிட்டார்) இலங்கை அரசு இவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். Problem solved. Be happy.

உண்மை
இனஅழிப்பு என்பதை நிராகரித்து விட்டது காரணம்.
வடக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக இனலவரம் ஏற்படுமௌ சூழ்நிலை கணட்டது இதனால் அவர்களின் உயிரா ஈஉடமையா என்ற கேள்விக்கு பதிலாக உயிர்கள்காக்க ப்பட்டது.
கிழக்கில் ஜீகாத் செய்த வெறியாட்டங்களால் வடகில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை தடுக்கவே இது நடை பெற்றது.
சம்மத்தப்பட்ட தரப்பினர் மன்னிப்பு கோரியதுடன் எல்லா தமிழர்களூம் மன்னிப்பு கோர கேட்டு சில அரசியல் வியாபாரிகள் நாடகம் போட்டாலும் எடுபடவில்லை.
காரணம்.கிழகில் தமிழரிடமிருந்து 23கிராமக இனஅழிப்பு செய்த ஜீகாத்துகளுக்காக யாரும் மன்னிப்பு கோரவில்லை.

Ltte முஸ்லிம்களின் கிராமங்களிலிருந்து அவர்களை விரட்டியதையும் ltte தான் இவ் இனத்துடைப்புக்கு காரணம் என்பதையும் ஒத்துக்கொண்டார் அந்தோனி. Well done.

@Lafir, இது "இனத்துடைப்பு" அல்ல.
மாறாக, இது ஒரு "கட்டாய வெளியேற்றம்", UN நேற்று தானே உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது.

கட்டாய வெளியேற்றம் என்பது முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக பரவலாக அரசாங்கங்களால் செய்யப்படுவது தானே.

அதற்காக, Ltte செய்ததை சரி என சொல்ல வரவில்லை. இதற்கான நஸ்ட ஈடுகள் அரசால் தான் வழஙலகபடவேண்டும். முஸலிம்கள் அரசின் பங்குதார்ர்கள் தானே. எனவே இது இப்போ உங்களின் பொறுப்பு.

Post a Comment