Header Ads



18 போர் விமானங்களை, கொள்வனவு செய்கிறது சிறிலங்கா


சிறிலங்கா விமானப்படை ஜெட் போர் விமானங்கள் உள்ளிட்ட 18 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிஹான் செனிவிரத்ன,

“சிறிலங்கா விமானப்படைக்கு ஜெட் போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், பயணிகள் விமானங்கள் உள்ளிட்ட 18 விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வரும் விமானங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்படும்.

தற்போதுள்ள வயது முதிர்ந்த சில விமானங்களுக்குப் பதிலாக, நவீன கால தேவைகளுக்கு ஏற்ற விமானங்கள் வாங்கப்படும்.

புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.

சில விமானங்களுக்கு உதிரிப்பாகங்கள் தேவைப்படுகின்றன. இந்த உதிரிப் பாகங்களின் விலையும் மிக அதிகம்.

சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகளில் பிரதான மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்வதற்கான விமானங்கள் தற்போது சிறிலங்கா விமானப்படைக்குத் தேவைப்படுகிறது.

முன்னர் சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா,  சீனா, பிரித்தானியா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

தற்போது கேள்விப்பத்திரங்களுக்கு  அமைய சில நாடுகள் விமானங்களை வழங்க முன்வந்துள்ளன. இவற்றை கவனமாக ஆய்வு செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.