Header Ads



1,75,000 மக்களை ஊரை விட்டே ஓடவைத்த கலிபோர்னியா காட்டுத் தீ


கலிஃபோர்னியாவின் சான் டியகோ (San Diego) நகரின் காடுகளில் இரண்டு நாட்களில் 14 முறை பயங்கர தீ ஏற்பட்டுள்ளது.

இதில் சுமார் 80 சதவிகித பகுதிகள் அழிந்து விட்டதாகவும், அதையடுத்து நகருக்குள்ளும் இந்த காட்டுத் தீ அசுர வேகத்தில் பரவி துவம்சம் செய்ததில் இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும்,

1000த்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், 12 மருத்துவமனைகள் வெடித்து சிறதறும் அபாயத்தில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தீயை உருவாக்கிய இறைவனிடம் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர அனைவரும் அவனிடம் பிரார்த்திப்போம்.

மறுமையின் தீ

உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களில் ஒரு பாகமேயாகும்.  நூல் : புகாரி 3265

இந்த ஒரு பாகம் நெருப்புக்கே அதுவும் இரண்டு நாட்களில் நகரை விட்டு 1.75.000 பேர் வெளியேறி விட்டார்கள் என்றால் இதைவிட 70 பாகம் எரியும் நரக நெருப்பு எப்படி இருக்கும் ? அங்கிருந்து வெளியேற முடியுமா ?

அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.

ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.அல்குர்ஆன.104:5,6,7,8,9

அவனை ஸகர் (எனும் நரகி)ல் கருகச் செய்வேன். ஸகர் என்றால் என்ன என்பது உமக்கு எப்படித் தெரியும்? அது மிச்சம் வைக்காது. விட்டும் வைக்காது.
தோலை (கரித்து) மாற்றிவிடும். அல்குர்ஆன.74:26

தப்பித்து வெளியேற முடியாத அந்த நெருப்பில் விழாமல் நம்மை தடுத்துக்கொள்ள இறையருளை பெரும் காரியங்களில் இறங்கி செயல்பட வல்ல அல்லாஹ் நமக்கு அருள் புரிய வேண்டும்.


தகவல் உதவி - அதிரை ஃபாரூக்

3 comments:

  1. பாவம் அப்பாவி மக்கள் ,ஈராக்,சிரியா,பலஸ்தீன்,ஆப்கானிஸ்தான்,ரோஹிங்யா அப்பாவி முஸ்லீம் களின் கண்ணீர் தீயாகவும்,காற்றாகவும்,வெள்ளப்பெருக்காகவும் அநீதியாளனின் நாட்டை அழிக்கிறது அல்லாஹ்வின் தீர்ப்பு தனக்கு வந்தால் தெரியும் மற்றவனின் வேதனை

    ReplyDelete
  2. @mustafa, ரோகினியா முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம்?

    பலஸதீனர்கள் இஸ்ரேலுடன் மொதுகிறார்கள்.

    ReplyDelete
  3. நீயே ஒரு இனவாதி உன்னோடு நான் பேசவோ கருத்து பரிமாறவோ விரும்பவில்லை

    ReplyDelete

Powered by Blogger.