Header Ads



பாடசாலையில் டெங்கு - கனவு, இலட்சியம், ஆசை, பாசம், துறந்த 11 வயது சிறுமி

கனவு, இலட்சியம், ஆசை, பாசம், அனைத்தையும் துறந்து 11 வயது நிரம்பிய சிறுமி டெங்குவிற்கு பலியான சம்பவம் ஒன்று குருநாகல் -வெல்லவ - மத்தேகம பகுதியில் சம்பவித்துள்ளது.

கவினி கயேஷா லங்காதிலக்க எனும் சிறுமி கடந்த 21 ஆம் திகதி சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டிலும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளார்.

கயேசா ஏற்கனவே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி என்பதால் அவருக்கு குறித்த வைரஸ் தொற்றானது உடலில் காணப்பட்டுள்ளது.

அத்துடன் மீண்டும் டெங்கு நுளம்பின் தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளார்.

இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவரது உடலிற்குள் இரத்த கசிவு காணப்பட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்ட கயேஷா கடந்த 25 ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

சிறுமியின் தந்தை வீதியோரத்தில் சிறிய சில்லரை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். 

தாய் தொழில் எதுவுமின்றி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல மகளிர் வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்ற கயேஷாவிற்கு 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சகோதரி ஒருவரும் காணப்படுகின்றார்.

அனைத்து சொந்தங்களையும் விட்டு பிரிந்த கயேஷா இன்று மாலை இயற்கையுடன் சங்கமிக்கின்றார் என்ற செய்தி மத்தேகம மக்களையே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டு கட்டிட அபிவிருத்தி நடவடிக்கைகள், காரணமாக பாடசாலையில் நீர் தேங்கி நிற்பதுடன் டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த பாடசாலையில் சங்கீத பாடம் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

1 comment:

  1. Arrest the PRINCIPLE f this School for his carelessness.

    ReplyDelete

Powered by Blogger.