Header Ads



வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாக கூறி 10 கோடி மோசடி - பிர­பல ஆசிரியை கைது

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பை பெற்­றுத்­த­ரு­வ­தாக சுமார் 10 கோடி ரூபா பணத்தைப் பெற்று பாரி­ய­ளவில் நிதி மோச­டியில் ஈடு­பட்ட குற்றச் சாட்டில் பிர­பல ஆசி­ரி­யை­ ஒ­ரு­வரை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் விசேட விசா­ரணைப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

கொழும்­பி­லுள்ள பிர­பல மகளிர் கல்­லூ­ரி­யொன்றில் ஜப்­பா­னிய மொழி கற்­பிக்கும் ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்­றி­வந்த இப்பெண், மாணவர் வீசாவின் மூலம் மாண­வர்­களை ஜப்­பா­னுக்கு அனுப்பும் வர்த்­த­க­மொன்றை மேற்­கொண்டு வந்­துள்ளார் என மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

இப்­பெண்ணின் மூலம் ஜப்­பா­னுக்கு அனுப்­பப்­பட்ட மாண­வர்­களின் ஆவ­ணங்கள் போலி என்­ப­தனால் ஜப்­பா­னிய அர­சாங்கம் அம்­மா­ண­வர்­களை நிரா­க­ரித்­தி­ருந்­தது. அதன்­பின்னர் சந்­தேக நப­ரான பெண் தொழில் பெற்­றுத்­த­ரு­வ­தாக, தன்­னிடம் வரும் ஒவ்­வொரு இளைஞர், யுவ­தி­க­ளி­டமும் தலா 7 தொடக்கம் 9 இலட்சம் ரூபா வரை பணத்தைப் பெற்று மோசடி செய்­துள்ளார் என தெரி­ய­வந்­துள்­ளது.

இதற்­காக சந்­தேக நப­ரான ஆசி­ரியை கட­வத்தை பிர­தே­சத்தில் ஜப்­பா­னிய மொழி பயிற்சி வகுப்­பொன்றை நடத்­தி­வந்­துள்ளார்.

இந்­நி­லையில் பல்­வேறு நபர்­களை ஏமாற்றி இப்பெண் பணம் பறித்­துள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­துக்கு கிடைத்த முறைப்­பா­டொன்­றுக்­க­மைய அப்­ப­ணி­ய­கத்தின் விசேட விசா­ர­ணைப்­பி­ரி­வினர் கட­வத்தை, சூரி­ய­பா­லுவ பிர­தே­சத்­தி­லுள்ள அவ­ரது வீட்டை முற்­று­கை­யிட்­டுள்­ளனர்.

அதன்­போது, 80 வெளி­நாட்டு கடவுச் சீட்­டுகள் மற்றும் ஜப்­பானில் தொழில் மேற்கொள் வதற்­கான பெருந்­தொ­கை­யான தொழில் உடன்­ப­டிக்­கைகள் என்­பன கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

அத்­துடன், 14 போலி முத்­தி­ரைகள் கைப்­பற்­றப்­பட்­ட­துடன் அவற்றில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­து­டைய இரு முத்­தி­ரை­களும் அடங்­கி­யி­ருந்­த­தா­கவும் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

சந்­தே­க­ந­ப­ரான பெண்ணை கைது செய்யும் வேளையில் அவரால் ஏமாற்­றப்­பட்ட அநே­க­மானோர் அவ்­வீட்டில் குழு­மி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­நபர் மஹர நீதி­வான்­நீ­தி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட வேளையில் அவரை எதிர்வரும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இலங்கை வரலாற்றிலேயே வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக மேற்கொள்ளப்பட்ட மோசடி களிலேயே இது பாரிய மோசடி என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினர் தெரிவிக்கின்றனர்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.