Header Ads



வடக்கு, கிழக்கு இணைப்புக்கு, Unp க்கு எந்த விருப்பமும் இல்லை - கபிர்

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதியில் முஸ்லிம் பிரிவுக்கான அமைப்பாளர் ஏ.சி.கியாஸ் தலைமையில் ஏறாவூரில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களிப்பு நடைபெறும் போது தாங்கள் தோல்வியை சந்திப்போம் என எதிர்கட்சியினர் தெரிவித்தனர்.

ஆனால் விசேடமான வெற்றி கிடைத்தது அதேபோன்று உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்.

எதிர்வரும் காலங்களில் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடாது தேசிய கட்சி மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து போட்டியிடும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வடக்கு கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களையும் உள்வாங்குவதற்கான வேலைத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆனால் இந்த விடயமாக இதனை பலமுறை பேசியுள்ளோம்.

இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒரு தேசத்தின் கீழ் ஒன்றுபட்டு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான கபிர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. தேர்தல் நேரம் வந்தாச்சு இனி எல்லோரும் வருவீங்க

    ReplyDelete
  2. Who are you to decide??
    People of East have to decide whether Tamil or Muslim or Sinhala

    ReplyDelete

Powered by Blogger.