September 14, 2017

மியன்மார் முஸ்லிம்களை பாதுகாக்க ஐ.நா வும், அரபு நாடுகளும் தலையிட வேண்டும். - கொட்டும் மழைக்கு மத்தியில் SLTJ) இன்று ஆர்பாட்டம்


மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இன அழிப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) நடத்திய மாபெரும் கண்டன பேரணியும், ஆர்பாட்டமும் மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு முன்னால் ஆரம்பித்து பஞ்சிகாவத்தை சுற்று வட்டத்தைத் தாண்டி, மருதானை சுற்று வட்டம் வரை சென்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இவ்வார்பாட்ட பேரணியில் ஆண்களும் பெண்களுமாக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொழும்பு – 07, லிப்டன் சுற்று வட்டத்தில் ஆரம்பித்து மியன்மார் தூதரகம் வரை செல்லவிருந்த நிலையில் நீதி மன்றம் குறித்த இடத்தில் ஆர்பாட்டம் நடத்துவதற்கு தடை விதித்தது.தடையைத் தொடர்ந்து ஆர்பாட்டம் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரஸ்மின் அவர்கள் தமிழ் மொழியில் கண்டன உரையாற்றியதுடன், ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியில் கண்டன உரையாற்றினார்.

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களை சுட்டிக் காட்டிய தவ்ஹீத் ஜமாஅத், ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு வாழ்வுரிமை வழங்கி ராக்கேன் மாநிலத்திலேயே மீண்டும் அவர்களை மீள குடியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதுடன், மியன்மாரின் அரச தலைவியாக இருக்கும் ஆங் சாங் சூக்கிக்கு வழங்கப்பட்டுள்ள சமாதானத்திற்கான நோபல் பரிசு மீளப் பெறப்பட வேண்டும், சர்வதேச நாடுகள் மியன்மாரில் கொல்லப்படும் அப்பாவி முஸ்லிம்களுக்காக மியன்மர் மீது அளுத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஐ.நா சபை உடனடியாக மியன்மார் விஷயத்தில் தலையிட வேண்டும். மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் மனித உரிமை மீறலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆசியான் அமைப்பு தலையிட வேண்டும்.

சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்தி விட்டு மியன்மார் முஸ்லிம்கள் விஷயத்தில் அதிக கவனம் எடுப்பதுடன், மியன்மார் முஸ்லிம்களுக்கு நிதியுதவி அழிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாது தேவைப்பட்டால் மியன்மாரின் அநியாயத்திற்கு எதிராக அந்நாட்டின் மீது இராணுவ நடவடிக்கையையும் அரபு நாடுகள் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

ஆளும் இலங்கை அரசு சிறுபான்மை மக்களின் அதிகூடிய வாக்குகளினால் ஆட்சியமைத்துள்ள நிலையில் இதுவரை எவ்விதமான அழுத்தங்களையும் மியன்மார் அரசின் மீது மேற்கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் முன்வைக்கப்பட்டது.

மியன்மார் அரசுக்கு எதிராக அரசாங்கம் அழுத்தம் தெரிவிப்பதுடன், தூதரக உறவையும் துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் மியன்மாரில் கொல்லப்படும் அப்பாவி முஸ்லிம்கள் விஷயத்தில் அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் மௌனம் காப்பது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்பட்டதுடன், மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பலத்த மழையிலும் தொடர்ந்த ஆர்பாட்ட பேரணி மாலை 4.15 க்கு நிறைவுக்கு வந்தது.

7 கருத்துரைகள்:

Last few decades our Muslims are doing these kind of protests.
What benefit ?
Situation is getting worse day by day.
Any evidence in Qur'an and Hadith for this ?
Did Rasulullah and Sahabah did protest against Kuffar ?

சவுதி அரேபியா மியன்மார் மீது போர் தொடுத்தால் ஏனைய முஸ்லிம் அல்லாத நாடுகள் இதில் தலையிட்டு நிலைமை முஸ்லிம்களுக்கு உலக மட்டத்தில் மோசமாக அமையும் .
அல்லாஹ் பாதுகாப்பானாக.

My Dear members of the SLTJ,

The Muslim community in Sri Lanka has already staged the protest in Colombo a week ago against killing of Muslims in Mynmar.This message has gone everywhere very effectively and showed us there is no necessity for another one by us.

WE AS MUSLIMS living in Sri Lanka can't understand the reason why you all have organized another protest.It could be justified if you have some other identity where as it is not so. We all believes the oneness God Almighty Allah (SWT) and follow the guidance of Prophet Muhammad (PBUH).

Please note that we have to Unite first in order to make our voice loud and effective.

what does கல்ல மெளனம் means...

If it happens the other way...these SLTJ should be the ones who created

why these donkeys are bringing the ladies to prtest,,, these ladies should have sort of common sense at least..Foolishness ..

Post a Comment