September 20, 2017

இனவாதிகளுடன் கைகோர்ப்பவர்கள், அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும் - SLTJ

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் தொடர்பாக டான் பிரியசாத் என்கிற ஓர் இனவாதியுடன் கொழும்பை சேர்ந்த இஸ்மத் மவ்லவி என்பவர் பேசிய ஆடியோ பதிவு ஒன்று வாட்ஸ்அப் போன்ற தளங்களில் பரவி வருகிறது.

குறித்த ஆடியோவில் பேசும் மவ்லவி அவர்கள், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பேசுவதுடன் சகோ. அப்துர் ராசிக் அவர்களை சுட்டுக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த ஆடியோ பரப்பப்பட்டது முதல் இது தொடர்பில் பலரும் ஜமாஅத்திடம் விளக்கம் கேட்பதுடன், குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்த வரையில் யாருக்கும், எதற்காகவும் பயந்து பிரச்சாரம் செய்யும் ஓர் அமைப்பல்ல என்பது உலகறிந்த உண்மையாகும். நம்மைப் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே அஞ்சி ஏகத்துவப் பிரச்சாரம் செய்து வரும் நம்மீது இனவாதிகள் வழக்குகளைக் கூட தொடுத்தும் நமது பயணத்தை தடுக்க முடியவில்லை. அல்ஹம்து லில்லாஹ்.

அந்த வகையில் குறித்த மௌலவியும் இனவாதிகளுடன் கைகோர்க்கும் விதமாக பேசியுள்ளார். அவருடைய பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து வேலைகளையும் ஜமாஅத் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேலையில், குறித்த மௌலவியே தான் இனவாதிகளுடன் தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும் சகோ. அப்துர் ராசிக் பற்றியும் பேசியது பெரும் தவறு என்றும் சமுதாயத்திற்காக போராடும் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் பற்றி தான் பேசியதையிட்டு வருந்துவதாகவும், அதற்காக பகிரங்கமாக மண்ணிப்புக் கேட்பதாகவும் கூறி ஓர் விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தான் செய்தது தவறு என்பதை பகிரங்கமாக அவரே ஒப்புக் கொண்டு மண்ணிப்புக் கோரியுள்ள காரணத்தினால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று ஜமாஅத் முடிவு செய்துள்ளதுடன், இது போன்ற அநாகரீகமான, இனவாதிகளுடன் கைகோர்க்கும் காரியத்தில் ஈடுபடும் ஈனச் செயலில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை அல்லாஹ்வுக்கு அஞ்சி மீள்பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்பதுடன், இனவாதிகளுடன் எத்தனை ஆயிரம் பேர் கைகோர்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சத்தியப் பயணத்தை தடுக்க முடியாது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

A.G ஹிஷாம் MISc,
செயலாளர்,
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ

5 கருத்துரைகள்:

எவ்வாறாயினும் தாங்கள் இந்த நாட்டின் செல்நெறிகள்,உலக அரசியல் காய் நகர்த்தல்கள் சர்வதேச ரீதியாக முஸ்லிம்கள் படுகின்ற அவலம்,நாட்டின் வரலாற்றுப் பார்வை, தீவிர ஆர்ப்பாட்டம், கோலங்கள்,அதனால் மிதவாத சிந்தனையுடைய சிங்கள சமூக மக்களின் மனப்பாங்கு மாற்றம், வீடுகளில் உள்ள பெண்களையும் வீதிகளில் இறக்கி விடும் செயற்பாடுகள் கண்டிக்கத் தக்கவைக்க.அவ்வளவு ஆரோக்கியமான செயற்பாடுகளல்ல.

மௌலவி சிங்களத்தில் விளக்கம் கொடுத்தால் தான் சரியானதாக இருக்கும்

சிலவிடயங்களில் பெண்களும் அடக்கத்தில் முடங்கியிருக்காமல் வெளியுலகிற்கு மார்க்கவரையறையுடன் வருவது சரியே. எத்தனையோ களியாட்டங்கள் மார்க்கத்தின் பெயரால் நடக்கும்போது பெண்கள் ஆடைஅணிந்த நிர்வாணிகளாக கணவர்மாருடன், வாப்பா உம்மாவுடன் புதினம்பார்க்க புறாசல் போகிண்றனர். முதலில் இவற்றை தடுப்போம். ஆரம்பிக்கவேண்டிய இடம், அவரவர் குடும்பம்....(நானுட்பட....)

Post a Comment