Header Ads



SLTJ ஆர்ப்பாட்டத்தை தடுத்தவர்கள், பௌத்த இனவாதிகளின் ஆர்ப்பாட்டதை தடுக்காதது ஏன்..?

முழு உலகத்திலேயே இலங்கை மாத்திரம் தான் மியன்மாருக்கு ஆதரவாக ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ள அதேவேளை sltj இன் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முனைந்த அரசு இனவாதிகளின் பேரணியை தடுக்க முயற்சிக்காமை ஏன் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்கும் வகையில் மியர்மார் அரசின் செயற்பாடு அமையப் பெற்றுள்ளது.பெரு மதிப்பிற்குரிய பௌத்த மதத் தலைவர்களில் ஒருவரான தலாய் லாமா கூட இந்த விடயத்தை பகிரங்கமாக கண்டித்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் இலங்கையில் இவ்வாறான ஆதரவுப் பேரணிகள் நடாத்தப்படுவதானது இலங்கை மக்களின் மனநிலையை சர்வதேச ரீதியில் கேள்விக்குட்படுத்துகிறது.

மியன்மார் அரசுக்கெதிராக sltj கண்டனப் பேரணியை நடாத்த முயற்சித்த போது, நீதிமன்றம் அவர்களின் திட்டத்தை குளப்பும் வகையிலான சில தடை உத்தரவுகளை வழங்கியிருந்தது. மியன்மார் அரசுக்கு ஆதரவாக இனவாதிகள் பேரணி நடாத்திய போதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு அவர்களுக்கு இவ்வரசானது ஆதரவு நல்கியிருந்தது.இவ்வரசானது இனவாதிகளை அரவணைக்கும் பண்புடையது என்பதற்கு இன்னுமென்ன சான்று வேண்டும்.

மியன்மார் அரசு முன்னெடுத்துக் கொண்டிருப்பது பயங்கரவாத செயற்பாடு. பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரிப்பவார்கள் பயங்கர வாதிகள் தான். அது மாத்திரமன்றி, மியன்மார் அரசின் செயற்பாடு பிழையானதல்ல என அனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பதால் இனவாதிகளின் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மியன்மார் விடயத்தில் இவ்வரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். வட கொரியா விடயத்தில் கண்டன அறிக்கை விடும் இவ்வரசானது மியன்மார் விடயத்தில் மௌனம் பேணுவதேன். தற்போது இடம் பெறும் பேரணி விடயங்களை எடுத்து நோக்கினாலேயே, இவ்வரசின் ஆட்சிக் காலத்தில் மியன்மாரைப் போன்று இலங்கையில் ஏற்பட்டால் அதனை இவ்வரசு ஆதரிக்கும் என்பதில் ஐயமில்லை.

நல்லாட்சி தொடர்பில் முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்

4 comments:

  1. நல்லாட்சியின் முகம் கிழிக்கப்பட்டு விஜயதாச போன்ற இனவாதிகள் வெளியெற்றப்பட்ட பின்னரும் இந்த அரசு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லையானால் - மகிந்தவின் பரிதாப நிலைதான் இந்த மைத்திரிக்கும் நாளை.

    ReplyDelete
  2. முதுகெழும்பு இல்லாத நாசமா போக வேண்டிய ஆட்சி

    ReplyDelete
  3. முதுகெழும்பு இல்லாத ரணில் மைத்திரி

    ReplyDelete
  4. But the both have brain that some of us have not.

    ReplyDelete

Powered by Blogger.