September 16, 2017

மஹரகம வைத்தியசாலையை, தெற்காசியாவில் சிறந்ததாக மாற்றுவதே நோக்கம் - MSH. மொஹமட்

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

எனது மகன் கண்ட கனவும், அதற்கான அவரது போராட்டமும், அதன் பின்னரான அவரது மரணமும் இலங்கையில் சிறந்ததொரு புற்றுநோய் வைத்தியசாலையை ஏற்படுத்த தமக்கு உந்துதல் வழங்கியுள்ளதாக ஹதீஜா பௌன்டேசன் ஸ்த்தாபகரும், FightCancer Team  அணியின் தலைவருமான MSH. மொஹமட் ஹாஜி கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

புற்றுநோயினால் எனது மகன் மரணித்து, அவருடைய ஜனாஸாவுக்கு முன் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளில் தெற்காசியாவில் சிறந்ததொரு வைத்தியசாலையாக மஹரகம வைத்தியசாலையை மாற்றுவது பிரதானமானது.

மஹரகம வைத்தியசாலையில் பெட் ஸ்கேன் உள்ளிட்ட இன்னும் பல வசதிகள் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன. இதனால் பண ஏழைக் குடும்பங்களும், புற்றுநோயாளர்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர்.  பல உயிரிழப்புகள் தினமும் நடக்கின்றன

இந்நிலை மாற வேண்டுமாயின் நாம் அனைவரும் மஹரகம வைத்தியசாலையை சிறந்த வைத்தியசாலையாக மாற்றியமைக்க வேண்டும்.

எமது முதல் இலக்காக மஹரகம வைத்தியசாலைக்கு பெட் ஸ்க்கேன் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடு நடைபெறுகிறது. அரச இயந்திரத்தில் உள்ள தாமதத்தினால் பெட் ஸ்க்கேன் பொருத்தும் நடவடிக்கை தாமதிக்கப்படுகிறது. இது முடிவடைந்தவுடன் இன்ஷா அல்லாஹ் நாங்கள் மீண்டும் மக்கள் முன் செல்வோம்.

மஹரகம வைத்தியசாலைக்கு இன்னும் பல உதவிகள் தேவைப்படுகிறது. அதையும் நாட்டு மக்களின் உதவியுடன் முன்னெடுப்போம். கடந்த காலங்களில் எமக்கு மக்கள் இன,மத பேதமின்றி எப்படி உதவினார்களோ அதேபோன்று இம்முறையும் பலமடங்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் இருக்கிறோம்.

இங்கு உதவி என்பதற்கு அப்பால், நமக்கோ அல்லது அல்லது நமது குடும்பத்தில் எவருக்கோ இல்லையேல் யாருக்கேனும் புற்றுநோய் ஏற்பட்டால் அவர் ஏழை என்பதற்காகவே அல்லது புற்றுநோய்க்கு சிகிச்சை பெற போதிய வசதியின்மை என்பதற்காகவே மரணத்தை தழுவக்கூடாது என்பதற்காகவேனும் நாம் இந்த முயற்சிக்கு கைகொடுக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் எல்லோரும் மஹகரகம வைத்தியசாலையை சிறந்ததாக மாற்றியக்க உதவுவதன் மூலம் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் கிட்ட தாம், அல்லாஹ்விடம் மன்றாடுவதாகவும் மொஹமட் ஹாஜியார் மேலும் சுட்டிக்காட்டினார்...!
Dear Sri Lankans,

We are the Fight Cancer Team in Sri Lanka, who raised a fund of 252 Million Rupees  to donate a PET Scanner to the National Cancer Institute of Maharagama.

Our team consists of 125 members now who are Sri Lankans living worldwide.

We are a team with a vision to promote our National Cancer Institute of Maharagama to the "Best Cancer Hospital of South Asia" standard in order to prevent cancer from being the no.1 killer disease in Sri Lanka by 2020.

To achieve a hospital that battles cancer with its full strength and capacity, our mission requires more soldiers to fight for this humanitarian course.

Our fight is only a fair struggle in the name of mankind, and to serve and repay our motherland with all our dues and respect.

After the PET Scanner is donated, our wish is to donate all other required medical equipment to the hospital.

The list includes:
Pet Scanner ✔
MRI Scanner
CT Scanner
Endoscopy Unit
Broncoscopes
Colonoscopes
Ultra Sound Scanner
Genetic Lab
Ambulances
Hearses and etc.

To propagate our mission, the current plan is to get 250 members who could effectively involve in it.

Please note that members are the driving force of this course. Hence we need more influential and strong warriors involved.

This is an open request to send in details for those who wish to join us. Please write to us with following details.

*Name
*Country
*Profession
*How can you help Fight Cancer Team as a volunteer
*Email Address
*Watsapp no

Please contact:
MSH Mohamed / Team Leader
Fightcancer Team
Kadijah Foundation 569 Galle Road Colombo 06
Srilanka

1 கருத்துரைகள்:

மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களின் லிஸ்ட் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலையையும், இதில் எது மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டிருந்தால் , உதவி செய்ய முன்வருபவர்களுக்கு இலகுவாக இருக்கும். அவர்களால் முழுமையாக தருவதற்கு முடியாவிட்டாலும் , அதில் சிறு தொகையாவது தந்துதவுவதற்கு முன்வருவார்கள். அல்லது குழுவாக இணைந்து ஏதாவது ஒன்றை செய்வதற்கு முடியுமாக இருக்கும்.

Post a Comment