Header Ads



ஊழல் செய்தவர்களுக்கு, ஊழலில் ஈடுபடாத JVP யினால் மாத்திரமே தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்

ஊழல்வாதிகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியினால் மாத்திரம் தண்டனை வழங்க முடியும் என அதன் தலைவர் அனுகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டு மக்களை 10 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா கடனாளியாக மாற்றியுள்ளனர்.

பெறப்பட்ட கடன் சஜின் வாஸ் குணவர்தனவின் வங்கிக் கணக்கில் உள்ளது. அந்த கடனில் பசில் ராஜபக்ச காணிகளை கொள்வனவு செய்தார்.

அது மாத்திரமல்ல மல்வானையில் 18 ஏக்கர் தென்னந்தோட்டத்தை கொள்வவு செய்து, மாளிகை போன்ற வீட்டை கட்டினார். அதே கடனில் ரவி கருணாநாயக்க வீடுகளை வாங்கினார்.

நாமல் ராஜபக்ச நிறுவனங்களை கொள்வனவு செய்தார். இந்த ஊழல் வலயத்தில் பீ.ஹெரிசன், எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் இருக்கின்றனர்.

சட்டத்தை கையாளும் நபர்களும் இதில் உள்ளனர். இதனால் வழக்குகள் தாமதமாகின்றன. எந்த அரசியல்வாதியும் சிறைக்கு செல்லப் போவதில்லை.

நாட்டில் ஊழல் செய்தவர்களுக்கு, ஊழலில் ஈடுபடாத மக்கள் விடுதலை முன்னணியினால் மாத்திரமே தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.