Header Ads



சிங்கப்பூர் ஜனாதிபதியாக, ஹலிமா யாகூப்


சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தலுக்கான பந்தயத்தில் இருந்த இரு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் மற்றொரு பெண் வேட்பாளரான ஹலிமா யாக்கோப் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய அதிபர் டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

இந்த முறை நடைபெறும் தேர்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்திருந்தார்.

இதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், இந்த தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. இதனையடுத்து, முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகிய இருவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

போட்டியாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால் ஹலிமா யாக்கோப் மட்டுமே அதிபர் தேர்தல் பந்தயத்தில் உள்ளார். இதன்மூலம் அவர் ஒருமனதாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக ஹலிமா யாக்கோப் முடிசூட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.