Header Ads



இஸ்ரேலுக்கு ரகசியமாக பறந்த, சவூதி இளவரசர் யார்..?

அடையாளம் காணப்படாத சவூதி அரேபிய இளவரசர் ஒருவர் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு ரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக இஸ்ரேலிய வானொலி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வொயிஸ் ஒப் இஸ்ரேல் வானொலி கடந்த வியாழக்கிழமை ஒலிபரப்பிய செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, “சவூதி அரச அவையின் இளவரசர் ஒருவர் இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டு இஸ்ரேல் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிராந்திய அமைதி முயற்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலை அங்கீகரிப்பதை சவூதி நீண்ட காலமாக நிராகரித்து வரும் நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி தொடர்பில் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் கருத்து வெளியிட மறுத்துள்ளது. எனினும் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கம் அடைந்திருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கடந்த வார ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஜோர்தான் மற்றும் எகிப்துடன் அமைதி உடன்படிக்கை கைச்சாத்திட்டிருக்கும் இஸ்ரேல் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் சவூதியுடன் நெருங்கி வருவதாக செய்திகள் கூறுகின்றன. 

4 comments:

  1. இனம் இனத்தை சாரும்.

    ReplyDelete
  2. Saudi wants to protect its regime at any cost.
    It fears Iran
    it is worried for MB .
    It is starting to arrest clerics.
    so and wait and see

    ReplyDelete
  3. எங்கடா முஸ்தபா ஜவ்பர கானமே

    ReplyDelete
  4. இவ்வாறான வதந்தி செய்திகள் வந்தால் என்ன அவசரம் இச்செய்தி வந்த பின் உடனடியாக சவ்தி அரசு மறுத்துவிட்டது இச்செய்தியை ஜ மு. முன் அல்ஜஸீராவும் பரப்பியது

    ReplyDelete

Powered by Blogger.