Header Ads



தனது பிள்ளைகள் குறித்து, இப்படிச் சொல்கிறார் சந்திரிக்கா

தமது மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் ஈடுபடுத்த எண்ணம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தாம், தமது மகனை அரசியலில் ஈடுபட ஊக்கமளிப்பதாக சில இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

எனினும் தமது மகனையோ மகளையோ அரசியலுக்குள் ஈடுபடுத்த தாம் முயற்சிக்கவில்லை என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள், மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.