Header Ads



தன் சகோதரரின் வாகனத்தில் மோதுண்டு இறந்தவர்களின், வீடுகளுக்கு மைத்திரி நேரில் சென்று அஞ்சலி

ஜனாதிபதியின் சகோதரருடைய வாகனத்தில் மோதுண்டு இறந்தவர்களின் வீடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பொலனறுவையில் பல்வேறு வைபவங்களில் இன்று (10) கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது சகோதரனுடைய வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு துக்கம் விசாரிக்க நேரில் சென்றுள்ளார்.

இதன்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி முதலான விடயங்களில் உச்சபட்ச உதவிகளை செய்து தருவதாகவும் ஜனாதிபதி வாக்களித்துள்ளார்.

பொலனறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொடை - எதுமல்பிடிய பாதையில் கடந்த 08ஆம் திகதி அதிவேகமாகச் செலுத்தப்பட்ட வாகனமொன்றில் மோதுண்டு இரண்டு பேர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய லாண்ட் குரூசர் வாகனம் ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த லால் சிறிசேனவுக்கு சொந்தமானது என்பதும் அவர் மணித்தியாலத்துக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் அதனை ஓட்டிவந்திருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்தின் பின்னர் தலைமறைவான லால் சிறிசேன கடந்த 09ஆம் திகதி பொலிஸில் சரணடைந்த நிலையில் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.