Header Ads



ஞானசாரவை அடைக்க வேண்டிய கூண்டில், ரணிலை அடைக்க வேண்டும்

-அஹமட் புர்க்கான்-

மஹிந்த அரசாங்கத்தின் போது ரோஹின்யாக்கள் அகதிகளாக வந்திருந்தார்கள் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார். அப்போது பௌத்த பிக்குகள் எங்கே இருந்தனர் என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இதன் மூலமாக மஹிந்த இனவாதியில்லை என்றும் அந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தும் பாதுகாத்தும் மஹிந்த வந்திருக்கிறார்.என்பது நல்லாட்சியில் மியன்மார் அகதிகளுக்கு தாக்குதல் நடத்துவதனூடாக முஸ்லிம்களை கருவறுக்க முஸ்லிம்கள் மீதே ஏறிவந்தது நல்லாட்சி என்பதையும் முஸ்லிம் சமூகம் இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும்.

பௌத்த அடிப்படை வாதிகளின் கூட்டாளியான அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் ஞானசாரவுடன் சேர்ந்து அளுத்கமையை எரியூட்டியதும் இப்போது ஞாபகத்தில் இல்லை என்று சொல்வதும் ஒரு புறமிருக்க 
மஹிந்த ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட ரோஹின்ய மக்களை இப்போது இனவாதிகளுக்கு காட்டிக்கொடுத்துவிட்டு அகதிகள் முகாம்களில் தாக்குதல் நடத்தியவர்களையும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் பார்த்துக்கொண்டு இருந்த பொலிஸாரையும் கைது செய்யவேண்டும் என கேலி செய்கிறார்.

அதற்கு மற்றொரு ஊடகவியளாலர் ஏன் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை என்று கேட்டதற்கு பாதுகாப்பு அமைச்சர் இல்லை. இருந்தால் அவரிடம் கேட்கலாம் என்று கேள்விக்கு பதில் வழங்காமல் திசைதிருப்புகிறார்.

டான் பிரசாதை கைது செய்து நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் கலகம் செய்து கொண்டிருக்கிறார்.

ஞானசார தேரர் எத்தனை அசம்பாவிதங்களுக்கு காரணமாக இருந்தார். நீதிமன்ற பிடியாணை இருக்கும் போது இலங்கை விமான நிலையத்தினூடாக ஜப்பானுக்கு செல்கிறார். மீண்டும் நாடு திரும்பி முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை ஊடக மாநாடு நடாத்தி பௌத்த அடிப்படைவாதிகளை சீண்டி விடுகிறார்.

இது அத்தனையும் நல்லாட்சியின் அனுசரனையுடன் நடைபெறுகிறது என்பதை ஞானசாரவுக்கு எதிரான நடவடிக்கை தூரமாதலும், முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுவதன் மூலமாகவும் நிரூபணமாகிறது.

இது ஒருபுறமிருக்க  நாட்டின் நீதியமைச்சர் தலதா அத்துக்கொரல இது சம்பந்தமாக எனக்கு தெரியாது என்னிடம் இவை தொடர்பில் கேட்க வேண்டாம் என்கிறார்.

எனவே இவர்களை இயக்கும் ரணிலையும் அவரது கூட்டாளிகளையும் ஞானசாரவை அடைக்க வேண்டிய கூட்டில் முதலில் அடைக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் இருப்பை இல்லாமல் செய்ய கொண்டுவரப்படுகின்ற திருத்தங்கள் நீதிக்கும், அரசமைப்புக்கும் மாற்றமாக, முரணாக இருக்கின்ற போதும் சட்டமூலங்கள் சர்வதிகார போக்கோடும் முஸ்லிம் எம்.பிக்களின் சோரம் போகும் அரசியல் கொள்கையோடும் நிறைவேற்றப்படுகிறது.

இதன் மூலம் முஸ்லிம்களை வன்முறைக்கு தூண்டி அதனுடாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம் சமூகத்த்ன் மீதான இனசுத்திகரிப்பு ஒன்றிற்கு வழிசமைக்கும் இந்த ஆட்சி நல்லாட்சியாக எப்படி இருக்க முடியும்? என்பதை முஸ்லிம் சமூகம் சிந்தித்து காலத்திற்கு தேவையான தலைவர்களை இனம் கண்டு தங்களுடை இருப்பு,பாதுகாப்பு என்பனவற்றை பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

3 comments:

  1. முஸ்லிம்களுக்கு அரசனை நம்பி புருஷனை விட்ட கதைதான் இந்த பீ ஆட்சியிலே!

    ReplyDelete
  2. முஸ்லிம் உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி சட்டம் நிறைவேறி உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.