Header Ads



"இலங்கையிலுள்ள மியான்மர் தூதரகம் மூடப்பட்டு, தூதர் வெளியேற்றப்பட வேண்டும்"

மியான்மர் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் விவகாரத்தில் அந்நாட்டு அரசுக்கும், ராணுவத்திற்கும் கண்டனத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை முஸ்லிம்கள் இன்று வியாழக்கிழமை தலைநகர் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை: ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்பாட்டம்
"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூர சம்பவங்கள் குறித்து ஐ.நா நீதி விசாரனை தேவை" என்றார் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவரான எம்.எப்.எம். ரஸ்மின்.

"தாக்குதலை நிறுத்த மியான்மர் அரசுக்கு இலங்கை அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையிலுள்ள மியான்மர் தூதரகம் மூடப்பட்டு தூதர் வெளியேற்றப்பட வேண்டும்" என்ற கோரிக்கைகளை தாங்கள் இலங்கை அரசிடம் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு பிரேரணை கொண்டு வந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.


"ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அந்நாட்டு பிரஜைகளாக கருதப்பட்டு வாழ்வாதார உரிமைகள் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளவர்கள் சர்வதேச கண்காணிப்பில் மீளக் குடியேற்றப்பட வேண்டும்.

மியான்மரின் நடைமுறை தலைவியாக விளங்கும் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசை மீளப்பெற வேண்டும்" என்ற கோரிக்கையையும் ஐ.நா, அரபு நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திடம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்துள்ளது.

இது தொடர்பான மனுக்களை வெள்ளிக்கிழமை உரிய தரப்பினரிடம் கையளிக்கப் போவதாக எம்.எப்.எம். ரஸ்மின் குறிப்பிட்டுள்ளார். BBC

No comments

Powered by Blogger.