Header Ads



மியன்மார் முஸ்லிம்களை, வடமாகாணத்தில் தங்கவைக்கலாம் - சிவாஜிலிங்கம்

இலங்கைக்குள் தஞ்சம் புகுந்த மியன்மார் முஸ்லிம் மக்களை வடமாகாணத்தில் தங்கவைக்கலாம், அதனை வடமாகாணசபை அங்கீகரிக்கும், எதிர்க்கப்போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 106 ஆவது அமர்வு இன்று -28- இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் விசேட கவனயீர்ப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், கொழும்பு, கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பகுதி ஊடாக மியன்மார் அகதிகள் 31 பேர் இலங்கைக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்கள் யாழ்.மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு ஐ.நா அகதிகளுக்கான ஸ்தாபனத்தினால் பொறுப்பேற்கப்பட்டு கல்கிஸ்ஸை பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பௌத்தர்கள் சிலரினால் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் தற்போது பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை வட மாகாணத்தில் தங்கவைக்கலாம். அதனை வடமாகாணசபை அங்கீகரிக்கும் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கலாம்.

மியன்மார் நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அவர்கள் பல்வேறு மார்க்கங்கள் ஊடாக வெளியேற முயற்சிக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொல்லப்படுகின்றார்கள்.

எனவே தஞ்சம் புகுந்தவர்களுக்கு இந்த நாட்டில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையினை வட மாகாணசபை கண்டிக்கின்றது.

மேலும், தமது கவனயீர்ப்புக்கு சபையில் எதிர்ப்புக்கள் எவையும் காட்டப்படவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளனர்.

7 comments:

  1. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பகுதி ஊடாக மியன்மார் அகதிகள் வந்துள்ளதால் நாமே அடைக்கலம் கொடுப்பது சிறந்த முன்னுதாரணமாக விளங்கும்.. நன்றி சிவாஜி லிங்கம் அவர்களே...

    ReplyDelete
  2. Yahapalanaya Jokers, Ranil and My3 - Are you hearing this?

    ReplyDelete
  3. There are million of sri lankan work and live in the west without any obstacle bec. they value and respect humanity. If the west bahaved like our fellow men with inhuman act, lot of sinhalese people too would have returned from the west. Humanity should salute Sivagilingam Sir for his condemnation of the violent behaviour.

    ReplyDelete
  4. This refugees came Northern sea so these peoples should keep their northern much better then south sinhala rasist goverments places.

    ReplyDelete
  5. அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அவர்களை மனிதர்களாக பார்ப்பது தான் சிறந்த மனிதனுக்கு அழகானதாக இருக்கும்

    ReplyDelete
  6. Thanks Mr.Sivagilingam.You are in our heart.

    ReplyDelete
  7. Thanks Hon. Sivagilingam you proof that your real human beings

    ReplyDelete

Powered by Blogger.