Header Ads



ரோஹிங்கிய அகதிகள் நாட்டுக்கு வந்தால், பெரும் சமூக சீர்கேடு நடைபெறும் - ஒப்பாரி வைக்கும் தேரர்

அதிகாரத்தில் இருக்கும் நல்லாட்சி அரசாங்கம் பௌத்த கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மெதகொட அபயதிஸ்ஸ ​தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கொஹுவளை சுனேத்ரா தேவி விகாரையின் பிரதம மதகுருவுமான அபயதிஸ்ஸ ​தேரர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேர்காணலில் தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர்,

இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களால் காடுகள் அழிக்கப்பட்டு ஆதரவாளர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.

சதொச போன்ற நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுடன் பாரியவில் போதைப்பொருள் கண்டெடுக்கப்படுகின்றது.

ரோஹிங்கிய அகதிகள் என்ற போர்வையில் நம் நாட்டுக்கு வருகின்றவர்களால் பெரும் சமூக சீர்கேடு நடைபெறலாம்.

ஆனால் யாரும் இவை பற்றி கவனம் செலுத்துவதில்லை.லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட ஆகியோர் பௌத்த தர்மத்தை வளர்ப்பதற்கான நோக்கில் சில் அனுட்டானத் துணிகள் வழங்கியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் குறித்த செயற்பாட்டில் எதுவித தனிப்பட்ட லாபமும் பெற்றுக் கொள்ளவில்லை என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் எதுவித மோசடிகளும் செய்யாத அரச அதிகாரிகளான அவர்களின் சம்பளத்தைக் கொண்டு சேமித்த பணத்தில் நீதிமன்றம் விதித்துள்ள பெருந்தொகை அபராதப் பணத்தை செலுத்த முடியாது.

அதன் காரணமாகவே பௌத்த பிக்குமார் பிச்சைப் பாத்திரம் ஏந்தி அவர்களுக்காக நிதி சேகரிக்கின்றோம்.

லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை பௌத்த தர்மத்துக்கு எதிரான சதியாகும்.

பௌத்த கலாச்சாரத்தை அழிப்பதற்கு இந்த அரசாங்கம் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.

2 comments:

  1. இந்த விடையதை சுயநினைவுடன் சொல்கின்றீரா அல்லது போதையிலிந்து கதைக்கின்றீரா?

    ReplyDelete
    Replies
    1. These type of comments will make the situation worse. It will not be taken as comment of an individual by them but it will be taken as a comment from the Muslim community.

      Please note that as long as they are in the saffron they will be respected by the innocent Buddhists.

      Delete

Powered by Blogger.