Header Ads



வேண்டியவாறு ஊழலில் ஈடுபடுமாறும், ஆனால் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் மஹிந்த கூறினார் - சந்திரிகா

களவு மேற்கொள்ளும் கலாசாரம் நாட்டில் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெயாங்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடுகளில் இடம்பெறும் மோசடி நிலைமைகள் குறித்து ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அரச சேவை, நீதிமன்றம் மற்றும் காவல்துறை என்பன தொடர்பில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதில், மோசடிகள் அதிகளவில் இடம்பெறும் 5 ஆவது நிறுவனமாக இலங்கையின் காவல்துறைத் திணைக்களம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்திருப்பதாக சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியல் தலைவர்களின் ஊழல்கள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு வேண்டியவாறு ஊழலில் ஈடுபடுமாறும் ஆனால், மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் கடந்த காலங்களில் முன்னாள் அரசத் தலைவர் அரசியல்வாதிகளிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் கலாசாரம் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

ஊழலில் ஈடுபடும் எதிர்பார்ப்புடனேயே அதிகாரத்திற்கு வருகின்றனர்.

அதனால்தான், நாடு பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.