Header Ads



ரோஹின்ய முஸ்லிம்களை, இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது - ரணில் அறிவிப்பு

எந்த நாட்டில் இருந்து வந்தாலும், அடைக்கலம் கோரும் அகதிகளை சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொஹிங்யா அகதிகள் தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு தொடர்பாக,  அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று -22- எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“ நல்லாட்சி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையில் எந்த அகதிகளையும் ஏற்றுக் கொள்ளும் முடிவு எடுக்கப்படவில்லை.

எந்தவொரு நாட்டினதும் எந்தவொரு குடிமகனும், குடிவரவு நடைமுறைகளுக்கு அமைவாக சிறிலங்காவுக்குள் நுழையலாம்.

மியான்மாரின் ரொஹிங்யா அகதிகள் இலகுவாக பங்களாதேஸ் அல்லது தாய்லாந்துக்குள் நுழையலாம்.

ஆனால் அவர்கள் இங்கு வருவதற்கான நோக்கம், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியாக தெரிகிறது. சிறிலங்கா அரசாங்கம் அத்தகைய சூழ்ச்சிகளை அனுமதிக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு, வெளிவிவகார அமைச்சர் திக் மாரப்பன வியாழக்கி (21) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, ரோஹின்யா முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவர்கள் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகதிகளுக்கான ஜெனீவா ஒப்பந்தத்தில் இலங்கை, கைச்சாத்திட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. அதன்படி அச்சுறுத்தல் உள்ள ஓருவர் இலங்கை வந்தால் அவருக்கு அடைக்கலம் கொடுத்து, அவரை ஐக்கிய நாடுகள் முகவர் நிலைய பாதுகாப்பில் ஒப்படைத்து, அந்நபர் உயிர்வாழ பாதுகாப்பான தேசமொன்றுக்கு அனுப்பிவைத்தலும் அவசியமாகும்.

அதன்படி இலங்கையில் தஞ்சமடைந்த சில ரோஹின்யா முஸ்லிம்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.