Header Ads



கொலைக்கார தேசத்தில் மோடிக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு..!


மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று -05- மியான்மர் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர சீனாவில் இருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் தரையிறங்கியதும் மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் முப்படையினர் அளித்த மரியாதையை ஏற்றுகொண்ட மோடிக்கு இன்றிரவு அதிபர் மாளிகையில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 7-ம் தேதிவரை மியான்மரில் தங்கும் பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை நாளை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக இருவரும் ஆலோசிப்பார்கள் என தெரிகிறது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகான் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆனந்தா ஆலயம் மற்றும் பல பகோடாக்கள் சேதம் அடைந்தன. சேதமடைந்த ஆனந்தா ஆலயத்தை புணரமைப்பு செய்யும் பணிகளில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் உதவியுடன் மியான்மரில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அவர் கேட்டறிகிறார்.

மேலும், இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வாழும் யாங்கூன் நகருக்கு செல்லும் அவர், அவர்களிடையே சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. போட்டுக் கொடுத்த திட்டம் செரியாக நடந்ததற்கு நேரடியாக நன்றி சொல்ல போய் இரொப்பான் படு பாவி

    ReplyDelete
  2. நாய்கள் நாயை வரவேற்கின்றது இனம் இனத்துடன் சேரும்

    ReplyDelete

Powered by Blogger.