Header Ads



கோத்தாபயவினால் 'எலிய' அமைப்பு உருவாக்கம் - முக்கிய தலைகள் ஒன்றிணைவு

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ‘எலிய’ (வெளிச்சம்) என்ற பெயரில் புதிய சிவில் சமூக அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளார்.

பொரலஸ்கமுவில் உள்ள கோல்டன் ரோஸ் விடுதியில் வரும் 6ஆம் நாள் மாலை 5 மணியளவில், இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.

புதிய அரசியலமைப்பு என்ற போர்வையில் நாட்டை ஒன்பது துண்டுகளாக கூறு போடும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அமைப்பை கோத்தாபய ராஜபக்ச உருவாக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புலமையாளர்கள், துறைசார் விற்பன்னர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில், மெடகொட அபயதிஸ்ஸ தேரர், கோத்தாபய ராஜபக்ச, சட்டவாளர் மனோகர டி சில்வா, றியர் அட்மிரல் சரத் வீரசேகர, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் மத்திய வங்கிய ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் தாமரா குணநாயகம், கலாநிதி தயான் ஜெயதிலக, மருத்துவ நிபுணர் சீதா அம்பேபொல உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.

No comments

Powered by Blogger.