Header Ads



எதிரணியில் அமருவாரா ஹ‌ரீஸ்..?

வ‌ட‌க்கும் கிழ‌க்கும் ஒரே மாகாண‌மாக‌ க‌ருத‌ப்ப‌டும் என்ற‌ இடைக்கால‌ அறிக்கைக்கு த‌ங்கு த‌டையின்றி கையை உய‌ர்த்திவிட்டு வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கெதிராக‌ கிழ‌க்கு இளைஞ‌ர்க‌ளை ஒன்று திர‌ட்டி போராடுவோம் என்றும் க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ம் கிடைக்காவிட்டால் பிர‌தி அமைச்சு ப‌த‌வியை ராஜினாமா செய்வேன் என்றும் முஸ்லிம் காங்கிர‌ஸ் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ஹ‌ரீஸ் பேசியிருப்ப‌து அக்க‌ட்சியின‌ரின் கையாலாகா த‌ன‌மும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை உஷார் ம‌டைய‌ர்க‌ள் என‌ நினைத்து பேசும் வ‌ழ‌மையான‌ உசுப்பேத்த‌லுமாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. 

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சி மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,
வ‌ட‌க்கு கிழ‌ப்பு இணைப்பு விட‌ய‌த்தில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ த‌லைமையிலான‌ அணியே த‌ம‌க்கு ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌மாக‌ உள்ள‌தாக‌ ஹ‌ரீஸ் பேசியிருப்ப‌து அவ‌ர‌து தாம‌த‌மான‌ ஞான‌த்தை காட்டுகிற‌து. 

இதைத்தான் உல‌மா க‌ட்சி 2015 தேர்த‌லில் மிக‌த்தெளிவாக‌ கூறிய‌து. அதாவ‌து, தென்னில‌ங்கை சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் முஸ்லிம்களுக்கெதிராக‌ இன‌வாத‌த்தை முனெடுப்ப‌தால் தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌வுக்கெதிராக‌ வாக்க‌ளித்தாலும் கிழ‌க்கு முஸ்லிம்கள் எந்த‌வ‌கையிலும் ம‌ஹிந்த‌வால் பாதிக்க‌ப்ப‌டாத‌ நிலையில், ம‌ஹிந்த‌வால் ப‌ல‌ ந‌ன்மைக‌ள் பெற்றுள்ள‌ நிலையில் வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌வை ஆத‌ரிக்க‌ வேண்டும் என‌ நாம் கூறிய‌ போது முஸ்லிம் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் எம்மை மேடை போட்டு தூற்றின‌ர். இப்போது  ஹ‌ரீஸ் பொன்றோர் வெட்க‌மில்லாம‌ல் ம‌ஹிந்த‌தான் ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம்  என்கிறார்க‌ள். 

க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ம் என்ற மிட்டாசுக்காக‌ வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்க‌ அனும‌திக்க‌ முடியாது. ஆக‌ குறைந்த‌து கிழ‌க்கு மாகாண‌த்தில் த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து ஆட்சி செய்யு முன் க‌ரையோர‌ மாவ‌ட்ட‌த்துக்கு த‌மிழ் கூட்ட‌மைப்பு ஆத‌ர‌வை த‌ந்தால்த்தான் கூட்டு என‌ தெரிவித்திருக்க‌ வேண்டும். ந‌ல்லாட்சி அர‌சுட‌ன் இணையும் போதாவ‌து இந்த‌ சின்ன‌ விட‌ய‌த்தை நிப‌ந்த‌னையாக்கியிருக்க‌ முடியும். அத‌னை விடுத்து ப‌த‌விக‌ளுக்கு ஆசைப்ப‌ட்டு ச‌மூக‌த்தின் பெறும‌தியான‌ வாக்குக்க‌ளை விற்று விட்டு இப்போது வ‌ழ‌மை போன்று முஸ்லிம்க‌ளை உசுப்பேற்றுகிறார்க‌ள்.

க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ம் என்ப‌து முஸ்லிம் மாவ‌ட்ட‌ம் அல்ல‌, த‌மிழ் பேசும் மாவ‌ட்ட‌மாகும். இத‌னை மிக‌ இல‌குவாக‌ த‌மிழ‌ர்க‌ளால் பெற்றுத்த‌ர‌ முடியும். முஸ்லிம் காங்கிர‌சை விட‌ த‌மிழ‌ர்க‌ளை இது விட‌ய‌த்தில் ந‌ம்ப‌ முடியும். ஆனாலும் முஸ்லிம் காங்கிர‌ஸ் முட்டாள்த‌ன‌மாக‌ க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ம் என்ப‌து ஏதோ த‌னி நாடு என்ப‌து போல் தூக்கிப்பிடிப்ப‌தால் இந்த‌ மிட்டாயை வைத்து கிழ‌க்கு என்ற‌ கிட்ணியை முஸ்லிம்க‌ளிட‌மிருந்து ப‌றிப்ப‌த‌ற்காக‌ த‌மிழ் கூட்ட‌மைப்பும் முஸ்லிம் காங்கிர‌சும் சேர்ந்து ஆடும் நாட‌க‌மே க‌ரையோர‌ மாவ‌ட்ட‌ இழுப‌றியாகும். 

முஸ்லிம்க‌ளின் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ வாக்குக‌ளைப்பெற்றும்
இந்த‌ சாதார‌ண‌ விட‌ய‌த்தைக்கூட‌ செய்ய‌ முடியாம‌ல் ப‌தவிக்காக‌ ச‌ர‌ண‌டைந்த‌வ‌ர்க‌ள் இளைஞ‌ர்க‌ளை ஒன்று சேர்த்து போராட‌ப்போகிறோம் என்ப‌து மிக‌ப்பெரிய‌ ஏமாற்றும் ந‌கைச்சுவையுமாகும். முஸ்லிம் காங்கிர‌சை ம‌க்க‌ள் தேர்ந்தெடுத்த‌து அத‌ன் ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள் ஜ‌ன‌நாய‌க‌ ரீதியில் போராட‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே த‌விர‌ தாம் ப‌த‌விக‌ளையும் ப‌விசுக‌ளையும் அனுப‌வித்து ச‌மூக‌த்தை அவ‌ற்றுக்காக‌ விற்று விட்டு பின்ன‌ர் இளைஞ‌ர்க‌ளை போராட்ட‌த்துக்கு அழைப்ப‌த‌ற்காக‌ அல்ல‌. 

ஆக‌வே ஹ‌ரீஸ் அவ‌ர்க‌ள் த‌ன‌து பேச்சில் உண்மையான‌வ‌ராக‌ இருந்தால் அவ‌ர் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் ஒரு மாகாண‌ம் என‌ குறிப்பிட்டிருக்கும் இடைக்கால‌ அறிக்கையை எதிர்க்குமுக‌மாக‌ த‌ன‌து த‌லைவ‌ர் ஹ‌க்கீமையும் அழைத்துக்கொண்டு பாராளும‌ன்ற‌த்தில் எதிர‌ணியில் த‌ற்காலிக‌மாக‌மாவ‌து அம‌ர்ந்து காட்ட‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து. 

3 comments:

  1. Hello உப்புமா கட்சி தலைவரே!
    வீட்டுக்குள் இருந்து கொண்டு, உப்பு-சப்பில்லாமல் statement விடாதீர்கள்.

    ஏதாவது வேண்டும் என்றால் வீதியில் இறங்கி தினமும் (வெள்ளி கிழமை மட்டுமில்லை) போராட்டங்கள் செய்யுங்கள்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.