Header Ads



ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம்

மாகாணசபைத் தேர்தல் சீர்த்திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை திவீரமாகவும், உறுதியாகவும் நின்று போராடியபோதும், அமைச்சர் ரிஷாட்டுக்கெதிராக பாராளுமன்றத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொய்யான பிரசாரங்களாலும் இறுதி நேர கால்வாரும் சம்பவங்களாலும் எமது கட்சி ஆதரவாக வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டதாக அக்கட்சியின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர்அலி தெரிவித்தார்.

எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த 'யாரும் மற்றொருவர் போல் இல்லை' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போது பிரதி அமைச்சர் அமீர் அலி இவ்வாறு தெரிவித்தார்.  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். புரவலர் ஹாஷிம் உமர் நூலின் முதற் பிரதியை பெற்றுக்கொண்டார். காப்பியக்கோ ஜின்னா சரீப்திPன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி மேலும் கூறியதாவது, 

மற்றவர்கள் மற்றவர்களாக தான் இருக்கின்றார்கள். யாரும் மற்றவர்களைப் போல் இல்லை என்பதனை கடந்த பாராளுமன்ற நிகழ்வு நமக்கு தெளிவாக புலப்படுத்துகின்றது. பாராளுமன்ற வரலாற்றில் 6.30க்கு இடம்பெறவிருந்த வாக்களிப்ப 8.42க்கு இடம்பெற்றமை இலங்கைச் சரித்திரத்தில் ஒரு வித்தியாசமான நிகழ்வாக கருதமுடியும். பாராளுமன்றம் அன்று தடம்புரண்டது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை புரட்டப்போகின்றார் என்ற பிரளயத்தைக் கிளப்பி அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கதைகள் பரப்பப்பட்டன. அவர்  விமர்சனங்களுக்கும், ஏச்சுக்களுக்கும் ஆளாகினார்.

20வது திருத்தச்சட்டத்தை இலகுவாக நிறைவேற்றி விடலாமென நினைத்திருந்த அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு மரண அடியாகியது. எனவேதான் சட்டவிரோதமான முறையில் பாராளுமன்ற நடைமுறைக்கு மாற்றமாக,  இடைச்செருகலாக மாகாணசபை தேர்தல் சீர்த்திருத்தச்சட்ட மூலம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்ற அரசு முனைந்தது.  ஏற்கனவே இந்தத் திருத்தச்சட்டத்தில், மாகாண சபையில் பெண்களின் பிரதிநிதித்துவ ஒதுக்கீடு தொடர்பாக ஒரு பந்தியில் கூறப்பட்டிருந்த விடயங்கள் நிலையியற் கட்டளையில் இடப்பட்டிருந்தன. எனினும் அதற்கு மேலதிகமாக 18தாள்களை உள்ளடக்கிய திருத்தம் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய முண்னனி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய மூன்று சிறுபான்மை கட்சிகளும் தமது சமூகத்தின் பாதிப்பை உணர்ந்து  விழித்துக் கொண்டனர். எனினும் இவர்களை ஏதாவது ஒரு வழிபண்ணி சட்டமூலத்தை நிறைவேற்றிவிட அரசாங்கம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. அமைச்சர்களான மனோ, ரிஷாட், ஹக்கீம் ஹிஸ்புல்லா ஆகியோரிடம் இதற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி வலியுறுத்தினார்.  எனினும் அமைச்சர் ரிஷாட் இந்த விடயத்தில் யாரையும் நாங்கள் நம்பத் தயாரில்லை என பிரதமருக்கு முன்னே ஜனாதிபதியிடம் தொலைபேசியில்  மிகவும் தைரியமாக தெரிவித்தார். 

இந்தச் சட்டமூலம் முஸ்லிம் சமூகத்திற்கும், மலையக சமூகத்திற்கும் பாதிப்பு என்பதையும் இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை சரி அரைவாசியாக குறைக்கும் என்கின்ற அச்சத்தின் காரணமாகவே நாங்கள் விடாப்பிடியாக நின்றோம். அதற்கு முந்தைய நாள் ஜம் இய்யத்துல்  உலமாவுடனான சந்திப்பிலும் இந்த விடயங்கள் மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டன. இந்தச்சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விடயம் இறுதி நேரம் வரை மறைக்கப்பட்டிருந்தது. 

ஏளிதாக இதனை நிறைவேற்ற முடியுமென நினைத்திருந்த அரசுக்கு, எங்கள் உதவி தேவைப்பட்டது. எனினும் நாங்கள் இந்தவிடயத்தில் விடாப்பிடியாக இருந்தபோதும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இன்னுமொரு புரளியை கிளப்பி அவரை எப்படியாவது மசியச்செய்வதற்கான நாடகம் அரங்கேற்றப்பட்டது.  அமைச்சர் ரிஷாட் எவரினதோ கொந்தராத்தை எடுத்துக்கொண்டு இந்தவிடயத்தை திணிக்கப் பார்க்கின்றார் என்று பாராளுமன்ற உறுப்பினர்களையும், பிரதம அமைச்சர்களையும் நம்ப வைக்கும் ஒரு படலம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  இதனால்  தான் வேறு வழியின்றி, உள்ளதுக்குள்ளே சமூகத்திற்கு பாதுகாப்பான  சில நன்மைகளை பெற்றுக்கொள்ளும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். இறுதியில் ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். என்றும் பிரதி அமைச்சர் கூறினார். 

12 comments:

  1. சிறு பிள்ளைத் தனமான பேச்சுக்களை முஸ்லிம் MP க்கள் பேசுகின்றனர்.தங்களது பதவிகளை காப்பாற்றும் ஒரே நோக்கில் முஸ்லிம் சமூகத்திற்கு துரோகமிழைத்துவிட்டனர்.உங்களது பட்டங்களும் பதவிகளும் அமானிதம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. சிறு பிள்ளைத் தனமான பேச்சுக்களை முஸ்லிம் MP க்கள் பேசுகின்றனர்.தங்களது பதவிகளை காப்பாற்றும் ஒரே நோக்கில் முஸ்லிம் சமூகத்திற்கு துரோகமிழைத்துவிட்டனர்.உங்களது பட்டங்களும் பதவிகளும் அமானிதம் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. Don't make us a polished we knew who are you

    ReplyDelete
  4. Don't make us a polished we knew who are you

    ReplyDelete
  5. நம்பிட்டோம்!

    மக்களை மடையராக்கலாம்
    ஆனால்
    உங்கள் வாயிலேயே மண்ணை போட்டுட்டீங்களே

    ReplyDelete
  6. வெட்கம், ரோசம், மானம், மரியாதை எதுவுமே இல்லையா? பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு ஆசனம் இல்லாமல் போனால் அரசாங்கம் புரண்டுடுமா? இப்படியும் இனியும் கதைக்க வாரிங்கள் என்ன! சரியான பாடங்கள் காத்திரூக்கின்றன; படிக்கத் தயாராகுங்கள். உயிர் போனாலும் வாக்களிக்க முடியாது என்று மறுத்திருக்க வேண்டிய விடயம். பொறுத்திருப்போம் சமயம் வரட்டும்.

    ReplyDelete
  7. வெட்கம் இல்லாமல் பேசும் பொய்யர்கள் இவர்கள் அன்று வாக்களிக்காமல் இருந்தால் இவர்களுக்கு எதிராக இவர்களின் ஊழல் பற்றி FCID பாயும் அரசாங்கத்தின் பங்காளி என்று சொல்லி கொண்டு செய்ய வேண்டிய மோசடி எல்லாம் செய்து விட்டு தப்ப வழி இல்லாமல் மக்களை அடமானம் வைத்து வாக்களித்து விட்டு இப்போது அகராதி பேச வாரீர்கள் ,இனி கனவிலும் நீங்கள் பார்லிமென்ட் பக்கம் போக கிடைக்காது,உங்களை நம்பியதை விட தமது பக்கம் இருக்கும் சிங்கள எம் பி களை நம்புவதுதான் இனி எதிர்கால முஸ்லீம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்,நீங்கள் எல்லாம் முதலில் கலிமா சொல்லி இஸ்லாத்துக்கு வாருங்கள் முதலில் முஸ்லிமாக வாழுங்கள் .அரசாங்க பணம் என்றாலும் மோசடி செய்வது பாவம்தான் அதுவும் முஸ்லிமுக்கு ஹராம்தான் ,கள்ளக் கூட்டத்தை பாராளுமன்றம் அனுப்பி விட்டு முஸ்லிம்கள் இரவும் பகலும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,

    ReplyDelete
  8. I know this MP very well. I know that he can do anything to be in power and keep his MP post. I know much more about him, but cannot expose in this comments column for legal reasons. THE ACMC AND THE SLMC INCLUDING ALL THE 21 MUSLIM MP's COULD HAVE AT LEAST REFRAINED FROM VOTING FOR THE 20th., AMENDMENT BILL IN PARLIAMENT.
    Muslims in Sri Lanka do NOT have a voice - a POLITICAL VOICE for that purpose. The SLMC is dead. The ACMC is busy making money, the Muslim politicians stooging the UNP are ONLY interested in their personal benefits. The ungrateful Muslim politicians who benefited the most from Mahinda Rajapaksa, Basil Rajapaksa and Gotabaya Rajapaksa are now stooging the Yahapalana government and enjoying their best with their kith and kin and henchaiyas, by selling the VOTE BANK of the Muslims who have been deceived lock-stock-and-barrel. The Muslim Civil Society in Sri Lanka and their leaders will stage dramas by releasing "press statements" and making FALSE speeches because all of them have been well taken care by the Yahapalana government as did the Mahinda government do and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut. The media will play their role to misguide the sincere and "appaavi Muslimgal". Like what happened in Aluthgama and Beruwela, Maharagama and Dambulla, they all will COVER up the TRUTH and the Muslims will be told a "LONG STORY. A few Muslim media like Jaffanamuslim.com have NOT failed to report unbaisely. WHAT EVER PARTY MUSLIMS MAY CONTEST, IT IS CLEAR THAT FAIZER MUSTHAPA HAS MADE OUR REPRESENTATION ABILITY TO BE REDUCED FROM 125 TO 60. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  9. வெட்கம் இல்ல இப்படி சொல்வதற்கு. நீங்கள் முஸ்லீம் சமூகத்திடம் வாக்கு கேட்க்கும் உரிமையை இழந்து விட்டீர்கள். தயவு செய்து அரசியலில் இருந்து விலகுங்கள்.

    ReplyDelete
  10. வெட்கம் இல்ல இப்படி சொல்வதற்கு. நீங்கள் முஸ்லீம் சமூகத்திடம் வாக்கு கேட்க்கும் உரிமையை இழந்து விட்டீர்கள். தயவு செய்து அரசியலில் இருந்து விலகுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.