September 30, 2017

ரோஹின்யர்களினால் இலங்கைக்கு ஆபத்து, இனவாதம் கக்கும் பிரபா கணேசன்

ரோஹிங்யா அகதிகள் ஐ.நாவில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் தஞ்சமடைந்து கல்கிஸ்சை பகுதியில் தங்கவைத்து  அவர்களை முஸ்லிம் அமைப்புகள் பராமரித்து வருவது இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும். இது இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது,

ஏற்கனவே எமது நாட்டிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனமுறுகல்கள் இவ் அகதிகளின் வருகையினால் மென்மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது. மனிதாபிமான முறையில் இவர்களை பாதுகாப்பது என்பது சிறந்த விடயமாகும். இருப்பினும் எமது நாட்டில் நிலப்பரப்புகளை ஒப்படும் பொழுது சனத்தொகை செரிவு அதிகமாகNவு உள்ளது. இதற்கு அப்பால் இவர்களை எமது நாட்டிற்குள் தஞ்சமடைய வைத்து செயல்படுத்துவதின் ஊடான முஸ்லிம் சமூகத்திற்கே அதி கூடிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். 

இவர்களுக்கு தஞ்சமடைய இடம் கொடுப்பதன் மூலமாக இன்னும் பல இலட்ச அகதிகள் இந்நாட்டிற்கு உட்பிரவேசிக்க கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் ஊடாக முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்தை அதிகரித்து அரசியல் இலாபம் தேடிக் கொள்ள இன்றைய முஸ்லிம் அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.  இது கண்டனத்துக்குரிய விடயமாகும். 

இன்று இவர்களுக்காக குரல் எழுப்பும் சிறுபான்மை அரசியல் தலைவர்களும் ஓரிரு பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தினால் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை பற்றி கருதுவதில்லை. இதனை நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு அவர்களுக்கான உரிமையினை முஸ்லிம் தலைவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாதுள்ளது. அதற்கு அப்பாற் சென்று இவ் அகதிகளின் ஊடாக பல இலட்சம் அகதிகளை இந்நாட்டிற்குள் கொண்டு வந்து முஸ்லிம்களின் விகிதாசாரத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வேலைதிட்டத்தினையே இவர்கள் செய்கின்றார்கள்.

எது எவ்வாறாயினும் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் மக்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ் சிங்கள மொழி அறியாத முஸ்லிம் அகதிகளின் வருகையின் ஊடாக முஸ்லிம் மக்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க முயல்வது கண்டனத்துக்குரியது. இவ் அகதிகளின் ஊடாக நாட்டிற்குள் ஐ.எஸ்எஸ்.ஐ தீவிரவாதிகள் உட்பிரவேசிப்பார்களாயின் நாட்டின் அமைதி கேள்விக்குறியாகி விடும். இன்றைய அரசாங்கம் இவர்கள் நாட்டில் தஞ்சம் அடைந்ததோ அல்லது ஐ.நாவின் ஊடாக கல்கிஸ்சை பகுதியில் குடியிருப்பதோ முஸ்லிம் அமைப்புகள் ஊடாக இவர்கள் பாராமரிக்கப்பட்டு வருவதோ பற்றி மூச்சு விடவில்லை. 

பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தின் ஊடாகவே நாட்டு மக்களுக்கு இது பற்றி தெரிந்துள்ளது. இது இந்த ரணில் அரசாங்கத்தின் கையாளாகாத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு எதிர்காலத்தில் மேலும் அகதிகள் தஞ்சமடைவார்களாயின் இலங்கையிலுள்ள தமிழ் அமைப்புகள் தமிழ் நாட்டிலிருந்து தமிழர்களை நாட்டிற்குள் கொண்டு வர தயங்கமாட்டார்கள்.

ஆகவே இவ் அகதிகளுக்கான மனிதாபிமாக குரல் எழுப்புவர்கள் அரசியல் இலாபங்களை மறந்து நாட்டின் இறைமையைப் பற்றி சிந்திக்க வேண்டும். வெறுமனே ஊடக அறிக்கையின் ஊடாக தம்மை மனித உரிமை காவலர்கள் என்று காட்டிக் கொள்வதை தவிர்த்து நியாயமாக சிந்திக்க வேண்டும். நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு முஸ்லிம் தலைவர்கள் செயல்பட வேண்டும்.

ஊடகப்பிரிவு

19 கருத்துரைகள்:

Don't publish this stupid comment

பிரபா கணேசன் இனவாத குழுக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறான கீழ்த்தரமான கருத்துக்கள் வெளியிட்டு வருவதை தவிர்க்க வேண்டும்

அடே லூசா. உனக்கு தலை சரியில்லையா இல்லாவிட்டால் போட்ட மப்பு இன்னும் இறங்கவில்லையா.இப்படியெல்லாம் கதைக்க சொல்லி. யார் எவ்வளவு ழணம் கொடுத்தான்கள்.

மனித உணர்வோடு பேசுங்கள்.உள்ளத்தில் இருப்பதுதான் வார்த்தையில் வரும்,எனவே நீங்கள் எப்படியானவர் நாங்கள் கண்டுகொண்டோம்

Who is he? he is trying to seek cheap publicity. Please remove this article immediately. We do not want to read this idiot's opinion. He is a bloody Kalla thonni. He is talking about us. Ask him to get loss.

this what America did in middle eastern countries. instead they used the weapon directly towards Muslims, they created Muslims to fight Muslims. here extreme group creating minority to an other minority to start fight like this praba. extreme caution required to handle this kind of trouble creaters. instead of stop his mouth why not allow him to talk and see what is talking about.

Praba, we don't have ISIS in Sri Lanka but we still have LTTE terrorits in the North and East that's why government will not remove army from there. Thanks for letting us know that you are a racist politician.

சொந்த அண்ணணுகே துரோகம் செய்தவனுக்கெல்லாம் இது பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. சும்மா பொத்திக்கிட்டு இருங்கோ.

தன்னுடைய சொந்த இனம் அகதியாக அழிந்ததை கண்ணால் கண்டு இருந்தும் அகதிகளளின் கஷ்டம் புரியாமல் இவர் பேசுவாதென்றால் ஏதோ மறைமுகமாக யாருடனோ ஒப்பந்தம் உள்ளது

Is there any body care this person?

Number one idiot. .பணத்துக்காக இப்படியுமா பேசுவார்கள்...

He had lost his trustworthy from his Tamil community, so he's trying to get publicity from Mahinda & Co following the footsteps of Wimal and pivithru helaurumaya fellow. He is playing dirty politics now to get support from MR & Co.

He is also with same background how can he talk about others in same nature very bad behaviour.

He is also with same background how can he talk about others in same nature very bad behaviour.

He is also with same background how can he talk about others in same nature very bad behaviour.

தமிழ் இனவாதிகள் சிங்கள இனவாதிகளை விட கேவலமான நாய்கள். அப்படியே தமிழன் அகதியாக சென்றிருக்கும் நாடுகளிலிருந்து எல்லாரையும் இலங்கைக்கு வரச்சொல்லி அறிக்கை விடு

Don't give him publicity. Jaffna Muslims on recent time giving publicity to lunatics like him.

Post a Comment