Header Ads



இலங்கைக்கு நிதியை குறைக்கும், ட்ரம்ப்பின் திட்டம் நிராகரிப்பு

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட்  சபை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கான நிதிஉதவியை 92 வீதத்தினால் குறைக்கும், டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டத்தை நிராகரித்து, அமெரிக்க செனட் சபையின், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான உப குழு கடந்தவாரம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“பல நாடுகளில், மரபணுச் சோதனைகள் மூலம், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது.

எச்சங்களை அடையாளம் காணப்படுவதற்கு, மரபணுச் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது.

சிறிலங்கா, சிரியா, ஈராக், கம்போடியா, எல்சால்வடோர், குவாடமாலா ஆகிய நாடுகளில், தடயவியல் அடையாளம் காணும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

இந்த நாடுகளில், இடம்பெற்ற மனித குலத்துக்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான ஏனைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும், நீதித்துறை விசாரணைகள், தேவைப்படுகின்றன.

எனவே, சிறிலங்காவுக்கான ஒட்டுமொத்த நிதி வெட்டையும் ஏற்க முடியாது, நிதியளிப்பதற்கு சிறிலங்காவுக்கு நிபந்தனைகளை விதிக்கலாம்“ என்றும் அமெரிக்க செனட் உப குழு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Why he could not apply this to Miyanmar and Israel for the ethnic cleansing work and land robbing.

    ReplyDelete

Powered by Blogger.