Header Ads



ரோஹின்யர்கள் குழந்தைகள் பெறுவதை, தடுக்கும் முயற்சியில் வங்கதேசம்


வங்கதேசத்தில் அகதிகளாய் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடும்ப கட்டுப்பாட்டு உபகரணங்களை வழங்க வங்கதேச சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

மியான்மரில் வன்முறை வெடித்துள்ளதால் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதுவரையிலும் நான்கு லட்சம் மக்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வங்கதேச அரசு அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகள் பிறப்பதை தடுப்பதற்கான உபகரணங்கள், கர்ப்பத்தை தடுக்கும் மாத்திரைகளை தடுக்க அந்நாட்டு அரசு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து குடும்ப நலத்துறை அமைச்சர் நஜீம் கூறுகையில், மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன, இங்கே சிறு வயதில் குழந்தைகள் பெற்றுக் கொள்வதும் பால்வினை நோய்கள் அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனை தடுக்கும் நோக்கில் ஆறு மருத்துவ குழு பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Bangaladese itself is a poorer country. It has given space to more than 4 lacks Rohingyans... It has done more than what this writer of the article has done.. Please stop finding mistake from a country that helped the Rohingyans. 1st see what u have done...

    ReplyDelete
    Replies
    1. Antony i have not seen you finding flats of Miyanmar the cause of the killings.. but why u try pick hair from eggs to make bad pic of bangaladese.

      Delete

Powered by Blogger.