Header Ads



'நிகாப்' அணிந்து சென்று, லஞ்சம் கோரியவர்களை பிடித்­த சுகாதார அமைச்சர்

உகண்­டாவின் சுகா­தார இராஜாங்க அமைச்சர் சாரா ஒபேன்டி, நோயாளி போல் நடித்து, வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று, லஞ்சம் கோரிய இரு உத்­தி­யோ­கத்­தர்­களை கையும் மெய்­யு­மாக பிடித்­துள்ளார்.

உகண்­டாவின் தலை­நகர் கம்­பா­லா­வி­லுள்ள நாகுரு அரச வைத்­தி­ய­சா­லையில் கடந்த வெள்ளிக்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

உகண்டா நாட்டின் சுகா­தார அமைச்­ச­ராக ஜேன் ஆசெங் பதவி வகிக்­கிறார். அவரின் கீழ் இராஜாங்க அமைச்­சர்கள் இருவர் உள்­ளனர்.

ஆரம்ப சுகா­தார துறை இரா­ஜாங்க அமைச்சர் ஜோய்ஸ் மொரிக்­குவும், பொதுச் சுகா­தாரத் துறைக்­கான இரா­ஜாங்க அமைச்சர் சாரா அச்­சியிங் ஒபேன்­டி­யுமே இவ்­வி­ரு­வரும் ஆவர்.

அமைச்சர் சாரா அச்­சியிங் ஒபேன்டி, அரச வைத்­தி­ய­சா­லை­களில் நோயா­ளி­க­ளிடம் லஞ்சம் கோரும் உத்­தி­யோ­கத்­தர்­களை நேரில் கண்­டு­பி­டித்து அம்­ப­ல­மாக்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்தார். 

இதன்­படி, கம்­பா­லா­வி­லுள்ள நாகுரு அரச வைத்­தி­ய­சா­லைக்கு அவர் நோயாளி போன்று சென்றார். இதன்­போது, அவர் 'நிகாப்' பாணியில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்­தி­ருந்தார். 

அப்­போது தன்னை யாரும் இனங்­கண்டு விடக் கூடாது என்­ப­தற்­காக, போடா போடா என உகண்­டாவில் அழைக்­கப்­படும் மோட்டார் சைக்கிள் டெக்­ஸியில் அமர்ந்­த­வாறே மேற்­படி வைத்­தி­ய­சா­லைக்கு சாரா ஒபேன்டி சென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

வைத்­தி­ய­சா­லையில் நோயாளி போல் நடித்த அவர், தனக்கு சில ஆய்­வு ­கூட பரி­சோ­த­னைகள் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாக உத்­தி­யோத்தர் ஒரு­வ­ரிடம் கூறினார்.

அப்­போது ஊழியர் ஒருவர், மருத்­து­வரை சந்­திப்­ப­தற்கு வாய்ப்­ப­ளிக்க வேண்­டு­மானால் தனக்கு 5000 உகண்டா ஷில்லிங் (சுமார் 213 இலங்கை ரூபா) பணம் தரு­மாறு அந்த ஊழியர் வலி­யு­றுத்­தி­னாராம். 

நோயாளி போன்று நடித்த அமைச்சர் சாரா ஒபேன்டி, ஊழி­ய­ரிடம் பணத்தை கொடுத்­து­விட்டு மருத்­து­வ­ரிடம் சென்றார். அங்கு அவ­ருக்கு மேலும் அதிர்ச்சி காத்­தி­ருந்­தது.

குறித்த மருத்­து­வரும் பரி­சோ­தனை செய்­வ­தற்கு தனக்கு 100,000 ஷில்லிங் (சுமார்  4256 ரூபா) லஞ்சம் கோரி­னாராம்.

இது குறித்து அமைச்சர் சாரா ஒபேன்டி கூறு­கையில், 

இந்த வைத்­தி­ய­சா­லையில் அனைத்து சேவை­களும் இல­வ­ச­மாக வழங்­கப்­பட வேண்டும். ஆனால், நோய­ளி­க­ளிடம் ஊழி­யர்கள் லஞ்சம் கோரு­வ­தாக ஏரா­ள­மான முறைப்­பா­டுகள் எனக்கு கிடைத்­தன. 

நான் சில மருத்­துவ பரி­சோ­த­னை­களை செய்­து­கொள்­வ­தற்கு 150,000 ஷில்லிங் செலுத்த வேண்­டு­மென என்­னிடம் கூறப்­பட்­டது. என்­னிடம் பணம் இல்லை எனக் கூறிய போதிலும் பணம் கொடுக்­கு­மாறு ஊழியர் வற்­பு­றுத்­தினர் எனத் தெரி­வித்­துள்ளார்.

நான் அவர்­க­ளிடம் பணத்தை செலுத்­திய பின்னர், பொலி­ஸாரை அழைத்தேன். அவர்­களால் மேற்­படி உத்­தி­யோத்­தர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர் எனவும் அமைச்சர் சாரா ஒபேன்டி தெரி­வித்­துள்ளார்.

அமைச்சர் சாரா ஒபேன்­டியின் நட­வ­டிக்­கையை வைத்­தி­ய­சா­லையின் பிரதிப் பணிப்­பாளர் ஸ்டீபன் கியேம்­பாம்பே பாராட்­டி­யுள்ளார். எமது வைத்­தி­ய­சா­லை­யி­லுள்ள ஊழி­யர்­களின் மோச­டியை அம்­ப­ல­மாக்­கு­வ­தற்கு உத­விய அமைச்­ச­ரவை நாம் பாராட்ட வேண்டும்.


No comments

Powered by Blogger.