Header Ads



முஸ்லிம்களை நயவஞ்சகமாக, நடத்தும் நல்லாட்சி


அளுத்கமை கலவரத்தின் போது இடம்பெற்ற சேதாரங்களை நிவர்த்திக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒதுக்கிய பணத்தில் இவ்வரசு ஒதுக்கியுள்ளதை விட பல மடங்கிலும் அதிகமான பணம் எஞ்சியிருந்ததாக முன்னாள் பாணதுறை பிரதேச சபையின் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இலங்கை முஸ்லிம்களுக்கு அளுத்கமை சம்பவம் ஒரு போதும் மறந்து விட முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் இல்லாத போது, அவரிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்கும் சதியின் உச்சகட்டமாக அரங்கேறிய நிகழ்வே அதுவாகும். 

இது நிகழ்ந்தவுடன், இதன் போது பாதிக்கப்பட்ட வீடுகள், கடைகளை திருத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருபது கோடி ஒதுக்கியிருந்தார். இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் திருத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. இதன் போது குறித்த மக்கள் தாங்கள் எந்த வகையில் வீடுகளை திருத்த விரும்பினார்களோ அந்த வகையில், அவர்களின் ஆலோசனைகள் உள் வாங்கப்பட்டு திருத்தி கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்ததோடு அவ்வாறே திருத்தியும் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் குறித்த மக்கள் தாங்கள் முன்னர் வாழ்ந்ததை விட சிறந்த வீடுகளை பெற்றுக்கொண்டனர்.

இந்த வீடுகளை திருத்தும் பணியில் இலங்கை இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டதோடு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலமை தாங்கினார். இதன் சேதாரங்கள் சீர் செய்ய குறுகிய காலம் தேவைப்பட்டது. அதனை சீர் செய்து முடிப்பதற்குள் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வந்துவிட்டது. இக் காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒதுக்கிய இருபத் கோடியில் மூன்று கோடிப் பணமானது எஞ்சியிருந்தது.

இந்த எஞ்சிய பணத்துக்கு இவ்வரசில் இன்றுவரை என்ன நடந்தது என்பது தொடர்பில் அறிய முடியவில்லை. ஆனால், இப்போது காயமடைந்த (12) ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், மரணமடைந்தவருக்கு (03) இருபது இலட்சம் ரூபாயும் வழங்க இவ்வரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கூறும் போது பெரிய தொகை போன்று தெரியலாம். கணக்கிட்டுப் பாருங்கள் ஒரு கோடி இருபது இலட்சமாகும். இது முன்னாள் ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்டு  பணத்தின் அளவில் பல மடங்குகள் குறைவானதாகும்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் கொண்டுவரப்பட்ட போது குறித்த இழப்பீட்டை குறைக்க ஒரு குழுவினர் முயற்சிக்க  அதனை எதிர்த்து முஸ்லிம் தரப்பினரும் போராடி பெற்றுள்ளனர். 

இவ்வாட்சியில் இந்த தீர்வு கிடைத்தமையானது மலையை பிளந்து சாதித்தது போன்ற ஒரு எண்ணம் முஸ்லிம் தலைவர்களுக்கு. முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் இப்படி போராடித் தான் இழப்பீடுகளை பெற்றார்களா? இதனை வழங்கவே இவ்வரசின் ஆட்சியின் அரை ஆண்டு காலம் முடிந்துவிட்டது. இந்த பணத்தை ஒரு அரசு வழங்குவதை விட இவ்வரசின் ஆட்சியாளர்கள் நினைத்தால் தங்களது சொந்தப்பணத்திலேயே இருந்தே வழங்கியிருக்கலாம்.

முஸ்லிம் மக்களே நன்றாகவே சிந்தித்து கொள்ளுங்கள். உங்கள் எதிரியையும் நண்பனையும் வேறுபடுத்திக் கொள்ளுங்கள் என அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. He is washing the .... side of the past MARA and preparing for coming election by waking on the blood of Aluthgama suhadaas.

    He forgot that his beloved MARA .. did not punish the culprits even after he came back same is done by current MY3 and Ranil.

    Àll of the protect the killers of our Aluthgama brother who died in Masjid due to the shooting.

    Please do not try to gain your political profit by selling the blood of our brothers. He should batter keep his mouth shut. If not DauA of affected people may harm him.

    ReplyDelete

Powered by Blogger.