Header Ads



முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்தும், மியன்மாரை கண்டிக்க நல்லாட்சிக்கு மனமில்லை..

ஒரு அரசானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள்,கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசானது முஸ்லிம்கள் பாதிக்கப்படும் விடயமேதும் என்றால் தூர நின்று வேடிக்கை பார்ப்பது வேடிக்கையாகிவிட்டது.

பிரான்ஸில் ரஷ்யாவில் மென்ஷெஸ்டரில் ஏன் பிரஸசல்சில்  நடந்த தாக்குதல்களுக்கும் இந்தியா யாத்திரிகர்கள் கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி கண்டன அறிக்கைகளை பதிவாக்கி இருந்தனர்.

மியன்மாரில் அந்த நாட்டு அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூர இனவாத செயலால்  பல இலட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல்லாயிரக்கணக்கானோரை மியன்மார் இராணுவம் ஈவிவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக கொன்று குவித்து வருகிறது. இதற்கு பலரும் கண்டம் தெரிவித்துள்ள நிலையிலும் இலங்கை அரசு மௌனம் காத்தே வருகிறது.

அங்கு பௌத்த மதத்தின் பெயரில் இப் பயங்கரவாதம் அரங்கேறிக்கொண்டிருப்பதால் பௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள இலங்கை அரசின் கண்டனம் கனதியான பெறுமானமுடையது. இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டே கிழக்கு மாகாண சபையில் மியன்மார் அரசின் இனவாதத்தை கண்டித்து பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பேசுமாறு மு.காவின் பா.உ தௌபீக் , மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீல் உள்ளிட்ட பலர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு ஏனையவர்கள் இவ்வரசை பேசுமாறு வலியுறுத்தியுமுள்ளனர்.இது தொடர்பில் தமிழ் தரப்பு கூட மியன்மார் மக்களுக்கு ஆதரவளித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இருந்த போதிலும் இவ் விடயத்தை இவ்வரசு கண்டுகொள்வதாக இல்லை.

முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தும் முஸ்லிம்களின் விடயத்தை இவ்வரசு கண்டுகொள்வதாக இல்லை. கோரிக்கைகள் ஏதுமின்றியே ஓடிச் சென்று ஏனையோர் விடயத்தில் தலைபோடுகிறது. இதுவே இவ்வரசின் உண்மையான முகமாகும். மியன்மார் அரசின் செயல்களோடு ஒத்துப் போகும்படியான நிகழ்ச்சி நிரல்களுடன் இயங்கும் இவ்வரசிடமிருந்து இதற்கு கண்டனங்களை எதிர்பார்ப்பது அர்த்தமற்றதுமாகும்.

அ.அஹமட்

5 comments:

  1. இவர்களும் பௌத்தர்கள் அதனால்தான் அமைதியாகிட்டினம்

    ReplyDelete
  2. Pohappohath Therium Intha Poovin vasam ????????????? RW and My3

    ReplyDelete
  3. The so called Muslim leaders have no balance in their account to talk to YAHAPALANYA as they have already utilized the balance in their account for their personal benefits.The YAHAPALANAYA will not give no more credit as they have been brought under bad debtors category.

    This is the current situation of our leaders.

    ReplyDelete
  4. முஸ்லிம்களும் அவன்கட தலைவர்களும் என்னிக்கும் கறிவேப்பிலை தான் பாருங்கோ. எங்கட தலைவர்களுக்கு பதவியை கொடுத்து பாருங்க. அவ்வளவுதான். பொட்டிப்பாம்பு கூட அடங்கிடும்,

    ReplyDelete
  5. If any of our Muslim MPs think he has any guts, then he should table a resolution condemning the Myanmar govt. for their genocide, irrespective of the Yahapalanya's opinion about this matter. Whether the resolution pass or not it will be a great opportunity to find out who and who are for and against Justice. Will our Muslim MPs risk their Ministerial posts to bring this resolution?

    ReplyDelete

Powered by Blogger.