Header Ads



ரோஹிங்யா விவகாரத்தில், நிதானம் அவசியம்

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உலகெங்கும் வாழும் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதுடன் கொதிப்படையவும் செய்துள்ளன. அந்த வகையில்தான் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களும் இதுவிடயத்தில் தமது கவலைகளையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மியன்மார் அரசின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கண்டித்து கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மியன்மார் அரசைக் கண்டித்து கொழும்பிலும் இதுவரை நான்கு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. 

இந் நிலையில்தான் இதற்கு மறுதலையாக மியன்மார் அரசாங்கத்துக்கும் அதன் தலைவி ஆங் சாங் சூகிக்கும் ஆதரவு தெரிவித்தும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பௌத்த சமூகத்தைச் சேர்ந்த ஒருசாரார் களமிறங்கிச் செயற்படத் தொடங்கியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகத்திற்குச் சென்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பௌத்த தேசிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் மியன்மார் விவகாரம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அடிப்படைவாதக் குழுக்கள் முன்னின்று வெளியிடும் பொய்யான தகவல்கள் காரணமாக மியன்மார் பௌத்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர். அத்துடன் கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தொடர்பில் தாம் வருத்தமடைவதாகவும் இலங்கை பௌத்தர்கள் எப்போதும் மியன்மார் பௌத்தர்களுக்கு ஆதரவானவர்கள் என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்றுதான் நேற்றைய தினம் சிங்ஹ லே அமைப்பினர் கொழும்பில் பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தனர். மியன்மார் தூதரகத்தையும் அமெரிக்க தூதரகத்தையும் நோக்கி பேரணியாகச் சென்ற இவர்கள் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான பதாதைகளைத் தாங்கியிருந்ததுடன் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். குறிப்பாக தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்பாகவும் கோஷமிட்டுள்ளதுடன் கல் ஒன்றையும் வீசியுள்ளனர். எனினும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதன் காரணமாக எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.

இதற்கிடையில் திட்டமிட்ட சக்திகள் சிலர்  'ஸ்ரீ லங்கா ஐக்கிய முஸ்லிம் சங்கம்' எனும் பெயரில் போலியான கடிதத் தலைப்பில் ரோஹிங்ய முஸ்லிம்கள் சிலருக்கு இலங்கையில் தற்காலிகமாக அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் சிங்களவர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருவதுடன் இதன் மூலமாக புதிதாக அகதிகளாகியுள்ள ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு இலங்கையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு அமைப்பு செயற்பாட்டில் இல்லை எனவும் போலியான முறையில் பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடும் நோக்கில் சிலர் இதனைச் செய்திருக்கலாம் என்றும் முஸ்லிம் சிவில் சமூகம்  சந்தேகம் வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களும் ரோஹிங்ய விவகாரம் தொடர்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தேவையற்ற வகையில் இலங்கையில் உள்ள பௌத்தர்களின் மனதைப் புண்படுத்துகின்ற வகையில் நாம் எந்தவித கருத்துக்களையும் வெளியிடக் கூடாது. எமது செயற்பாடுகள் இனவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பமளிப்பதாக அமைந்துவிடக் கூடும். நேற்று சிங்ஹ லே அமைப்பினர் நடத்திய பேரணி முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்.  இது தொடர்பில் மக்கள் விழிப்பூட்டப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விடயங்களை மனதில் கொள்வார்கள் என நம்புகிறோம்.

-விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்-

6 comments:

  1. Better to act according to the guidelines of ACJU.
    ( Until they guide us under the light of Quran & Sunnah )

    ReplyDelete
  2. so far 1 mn people killed in syria & iraq and still continuing . who care or talked. ACJU never spoken about syria & iraq.

    ReplyDelete
  3. When Islamic countries can't do anything how we can expect ACJU to speak and stop the crisis in Syria, Iraq etc....
    I said the above statement because unity is important in Muslim community. If everyone act as they want Muslim community will split in to pieces.
    It's better and safe to be under one guidance.
    If they take any decision against Qur'an and Sunnah no need to obey them.
    Hope you got my point.
    Jazakallah.

    ReplyDelete
  4. What'S there to talk about Iraq n Syriya by ACJU ? Is it Newton's theory of Gravity for harping on samecspring?
    We shouldnt drag then into firetrap. Let's keep our head cool with presence of mind.

    ReplyDelete
  5. What'S there to talk about Iraq n Syriya by ACJU ? Is it Newton's theory of Gravity for harping on samecspring?
    We shouldnt drag then into firetrap. Let's keep our head cool with presence of mind.

    ReplyDelete
  6. Mr.unknown. there is different between sriya and miyanmar.that is cvil war. This is not a civil war.

    ReplyDelete

Powered by Blogger.