September 13, 2017

ஹுமைட்டின் ஜனாஸா நல்லடக்கத்தில், பெருமளவு சிங்கள சகோதரர்கள் பங்கேற்பு

மஹகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட்  ஸ்க்கேன் பெற்றுக் கொடுப்பதற்காக தீவிர முயற்சியை மேற்கொண்டவரும்,  அதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவருமான மொஹமட் ஹாஜியாரின் மகன் ஹுமைட்டின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று செவ்வாய்கிழமை -12- தெஹிவளையில் நடைபெற்றது.

Fight Cancer அணியில் உள்ள, சிங்கள சகோதரர்கள் தமது குடும்பத்தில் ஒரு உறவினரை இழந்துவிட்ட உணர்வுடன்  ஜனாஸா நல்லடக்கத்தில்       பங்கேற்றுள்ளனர்.

இதில் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அடங்கலாக பெருமளவு சிங்கள சகோதரர்கள் பங்கேற்றுள்ளனர்.

பெட்  ஸ்க்கேன் கொள்வனவுக்காக கண்டி தலதா மாளிகை 25 இலட்சத்தையும், பெயர் குறிப்பிட விரும்பாத சிங்கள சகோதரர் ஒருவர் 3 கோடி 60 இலட்சம் ரூபாய்களையும் பல ஆயிரக்கணக்கான சிங்கள சகோதரர்கள் பல நிதியுதவிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 கருத்துரைகள்:

Your and your father's services can't be forgotten easily brother. "MAY ALLAH AZZA WAJAL GRANT YOU JENNATHUL FIRDOWS IN SHA ALLAH". AAMEEN.

Post a Comment