Header Ads



கத்தார் பிரச்சனைக்கு, புரோக்கர் வேலை செய்யத் தயார் - டிரம்ப்

கத்தாருக்கும், அதற்கு அருகிலுள்ள அரேபிய நாடுகள் சிலவற்றிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவு வழங்குகிறது என்ற தங்கள் குற்றச்சாட்டின் அடிப்படையில், சௌதி அரேபியாவின் தலைமையிலான கூட்டாளி நாடுகள் கத்தாரோடு இருந்த உறவை கடந்த ஜூன் மாதம் துண்டித்து கொண்டன.

தான் தலையிட்டால், இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட இருதரப்புகளும் மிக விரைவாக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என்று நம்புவதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

குவைத் அரசர் ஷேக் சபா அல்-அகமத் அல்-ஜபார் அல்-சபாவோடு நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண உதவ முடியும் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதாக அந்த நிகழ்வில் பேசிய குவைத் அரசர் தெரிவித்தார்.

1 comment:

  1. YAHOODI GOING TO SOLVE MUSLIMS PROBLEM?????WHAT A BEAUTY SAME

    ReplyDelete

Powered by Blogger.