Header Ads



விமான நிலையத்தில் புர்காவை நீக்கமறுத்த பெண், வந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்

பெல்ஜியம் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் புர்காவை நீக்க மறுத்த இஸ்லாமிய பெண் ஒருவர் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டென்மார்க் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் துனிசியா நாட்டிற்கு சென்றுள்ளார்.

துனிசியா நாட்டில் இருந்து பெல்ஜியம் நாட்டிற்கு பயணமாகியுள்ளார். துனிசியாவில் புறப்படுவதற்கு முன்னர் புர்காவை நீக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெல்ஜியம் நாட்டு விமான நிலையத்தை அடைந்தபோது சில அடையாளங்களுக்காக அவரது முகத்திரையை நீக்க வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இஸ்லாமிய பெண் முகத்திரையை நீக்க மறுத்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் பெல்ஜியம் நாட்டில் புர்கா அணிவதற்கு தடை உள்ளது.

இச்சட்டத்தின் அடிப்படையில் விதிமுறைகளை பின்பற்றாத இஸ்லாமிய பெண்ணை விமான நிலைய பொலிசார் துனிசியா நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

இத்தகவலை பெல்ஜியம் குடியமர்வு துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

’பெல்ஜியம் நாட்டில் புர்கா அணிவதற்கு தடை உள்ளதாலும், சட்டத்தை பின்பற்றாத அப்பெண்ணை திருப்பி அனுப்பி விட்டதாக’ தெரிவித்துள்ளார்.

இத்தகவலை டென்மார்க் நாட்டு குடியமர்வு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பெல்ஜியம் குடியமர்வு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

6 comments:

  1. இது இந்தப் பெண்ணின் தெரியாமை என்றே கூற வேண்டும், இப்படியான சந்தர்ப்பங்களில்தான் இஸ்லாம் எமக்கு ஒரு தளர்வைக் கொடுத்திருக்கின்றது. உதாரணமாக பன்றி தடுக்கப்பட்டவை ஆனால் நிர்ப்பந்திக்கப்படும் நேரத்தில் உண்ண முடியும் என்பது போல்.

    ReplyDelete
  2. She should open her veil (Face cover) for security purposes. These kind of activities bring bad name to Islam.

    ReplyDelete
  3. What's important for this message.

    ReplyDelete
  4. What's wrong with this...

    ReplyDelete
  5. புர்க்கா பற்றிய சர்ச்சைகள் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் உள்ள நிலையில் உண்மையில் அப்பெண் அந்த நாட்டின் சட்டத்தை மதித்து நடந்திருக்க வேண்டும். புர்க்காவை அகற்றி பர்தா அணிந்து சட்டத்தை மதிக்கும் தன்மையை கற்றுக் கொள்வது யூத சியோனிச சதிகளை வெல்லும் ஒரு சிறந்த செயற்பாடாகும்

    ReplyDelete
  6. EXACTLY! LACK OF KNOWLEDGE RESULTS IN MISUNDERSTANDING THE ISLAMIC PRINCIPALS AND TEACHINGS. ITS A LESSON FOR LADIES IN OUR COUNTRY WHERE
    WE ARE A MINORITY COMMUNITY. MAY THE ALMIGHTY GUIDE ALL OF US IN THE RIGHT PATH.

    ReplyDelete

Powered by Blogger.