September 22, 2017

முஸ்லிமை பார்த்து திட்டிய பிக்கு, பஸ்ஸிலிருந்து இறக்கி விடப்பட்டார் (உண்மைச் சம்பவம்)

-Mohamed Nizous-

ஹிஜ்ரி 1439 பிறை 01 காலை 8 மணி. கொழும்பு நோக்கி செல்லும் பிறைவட் பஸ்ஸில் ஏறினேன். 

மதகுருமாருக்கான ஆசனத்தில் ஒரு தொப்பி தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்து சீற்றில் ஆளில்லை. 

அதில் உட்கார்ந்து சென்றால் 'அவர்கள்' இடையில் குடையுடன் ஏறினால் வடை போய்விடும் என்ற நினைப்பில் அதற்குப் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன்

அந்தப் பிரபல விகாரையின் முன் பஸ் நின்றதும் காவியுடையுடன் 'அவர்' ஏறினார். 

தொப்பி ஜன்னலோர இருக்கையை அவருக்குக் கொடுத்து விட்டு மறு இருக்கைக்கு நகர்ந்தார்.

" மிருகத்திட கழுத்தில் கத்தி வைக்கிறவனுக்குப் பக்கத்தில் எல்லாம் நான் உட்கார முடியாது. நீங்களெல்லாம்............"வார்த்தைகளை வளர்த்துக் கொண்டு போனார். உட்காரவில்லை. 

தொப்பி அமைதியாக அமர்ந்திருந்தார். எழும்பவுமில்லை. எதிர்க்கவுமில்லை.

" உங்களைப் போல ஆட்களால்தான் நாடு சீரழியுது. எல்லோரும் மனுசன்கள்தான். முதல்ல அதைப் புரிஞ்சு கொள்ளுங்க" அந்த சிங்கள கண்டக்டரின் கர்ஜனையில் பஸ் அதிர்ந்தது. 

" முதல்ல மனுசத்தன்மையாய் கதைக்கப் பழகுங்க" என் பக்கத்திலிருந்த சிங்களப் பெண் போட்ட சத்தத்தில் காவி கப்சிப் ஆனது.

சாரதி பஸ்ஸை நிறுத்தினார். " தயவு செய்து இறங்குங்க" கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாய் காவி இறக்கி விடப்பட்டார். 

" சரியான வேலை" சிங்களக் குரல்கள் பரவலாகக் கேட்டன.

இறக்கிவிடப்பட்ட காவியை விட்டு விட்டு இறக்காத மனித நேயத்துடன் பஸ் பயணத்தைத் தொடர்ந்தது.

(நம்ப ஏலா, பஸ் நம்பர் என்ன? காரில்தானே போவீர்கள்? வீடியோ ஆதாரம் இருக்கா?- கேட்கும் சகோதரர்களுக்கு - நீங்கள் நம்பாமலே இருந்து விட்டுப் போங்கள். யாருக்கும் நஷ்டமில்லை)

17 கருத்துரைகள்:

இவ்வாறான மனித நேய சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த சகோதரருக்கு நன்றிகள் .

It is great news.good example of you and bus conductors and owners

Most of the Sinhalese are good. This incident proves how good they are!.

Only handfull have hatred towards Muslims. Many Buddhist are kind hearted.

சாந்தி சமாதானம் வாழ்க

In Sri Lanka we have so many ABUTHALIF.S. BUT OUR BAD HABBIT BAD DEALING SO MANY ABUJAHL GROWED IN SRI LANKA.WE ARE LEAVING WITH 95% ABUTHALIF.S MENTOLITY.

Yes,Agreed. Majority Buddhists I'm Sri Lanka are very corporative.. I really liked the last paragraph within brackets... 👌👍

Thanks for respectable peoples
And welcome srilanka

Most of the time, where public is involved, if we are patient, the problems resolve by itself.

மனித நேயம் உயிருடனே...

எம் இனத்தைச் சேர்ந்த சிலர் இப்படியான மிதவாத சிங்கள உள்ளங்களை உசுப்பேத்தி நாடளாவிய ரீதியாக ஒரு பெரும் சிங்கள-முஸ்லிம் கலவரமொன்றைத் தூண்டி விட முயற்ச்சிப்பதன் ஒரு செயற்பாடே வீதிகளில் ஆண்களும் பெண்களுமாக ஆர்ப்பாட்டம் செய்வதாகும்.

Moral: WHen someone speaks ill of you in public, be patient and make dua within yourself so Allah will help you to overcome from that situation.

Elloaruukkum Tamil Theriyum Azanal Gawrawamana Warthaikalai Pawikkawum

அபூ தாலிப்கலைய் உருவாக்க நாம் மரந்தபோதிலும் தாலிபுகள் தானாக உருவாகின்றன

Post a Comment