Header Ads



இரவு வேளைகளில், மிகவும் பயத்தோடு இருந்தோம் - மைத்திரியின் மகள் தெரிவிப்பு


“நான் பாடசாலை செல்லும் போது, எனது நண்பர்களின் பெற்றோருக்கும் எனது தந்தைக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கின்றது. எனது தந்தை வித்தியாசமானவர், நான் அவரை வேறு கோணத்தில் பார்த்தேன்” என ஜனாதிபதியின் புதல்வரான சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால் எழுதப்பட்ட “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நான் எனது அம்மாவுக்கு உதவி செய்து தந்தையின் வேறுபாடுகளையும் அவதானித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனது தந்தையின் செயற்பாடுகள் ஏன் வேறுபட்டு இருக்கின்றது என சிந்தித்தேன். அவருடைய அன்றாட செயற்பாடுகளை அவதானித்தபோதுதான் ஒரு விடயம் எனக்கு தெரிந்தது.

அதாவது, எனது தந்தை நாட்டை ஆட்சி செய்வது ஏனைய ஆட்சியாளர்களை விடலும் மாறுபட்டு காணப்படுகின்றது.

எனது தந்தையின் அரசியல் பயணத்தின்போது பல தடைகள் ஏற்பட்டன. “அரசிலை விட்டு விலகுங்கள் அல்லது உயிர் பறிக்கப்படும்” என அச்சுறுத்தல் கடிதம் வந்தது. அதைப்பார்த்து எனது அம்மா அச்சம் கொள்ளவில்லை.

யுத்த காலம் வந்தது. என்னுடன் பயிலும் சக மாணவர்கள் காடுகளில் இருந்துதான் பாடசாலைக்கு வந்தார்கள். இதற்கு காரணம் இரவு வேளைகளில் விடுதலைப்புலிகள் வீடுகளுக்கு வந்து கொலை செய்வார்கள் என்ற அச்சமே.

அந்த யுத்தகாலத்தில் எனது தந்தைக்கு பாரிய அச்சுறுத்தல்கள் வந்தன. ஐந்து தடவைகளுக்கும் மேல் அவர் பாரிய பேராபத்திலிருந்து தப்பித்தார்.

இரவு வேளைகளில் மிகவும் பயத்தோடுதான் நாம் இருந்தோம். இந்த யுத்தத்திற்கு சென்றவர்கள் எமது பரஜைகள்.

மேலும் இந்த புத்தகத்தை எழுதியதை நினைத்து நான் மிகவும் பெறுமையடைகின்றேன். இது குறித்து எழும் விமர்சனங்களை நான் மரதார ஏற்கின்றேன்.” என ஜனாதிபதியின் புதல்வரான சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Why not give the young lady a chance to enter parliament. If the system of “By-Elections” was there, she could have entered parliament by contesting a seat now, without having the “stigma” of becoming a “list/chit” member of parliament of the SLFP which the father can help her to become under the present elections law. The media/social media should not make her unpopular among the SLFP voters by writing/publishing statements like “Chathurika Butchers Appachi”; Now it is Thaththa Of The Nation”. Chathurika needs the SLFP votes to go to parliament, not the UNP votes. So the media should not portrait Chathurika as a “political butcher”. “The Muslim Voice” is not a supporter of the “yahapalana government”, but “The Muslim Voice” likes to give this young lady a chance and will campaign for her to harness the Muslim votes in the Plonaruwa/Maderigiriya districts when she contests. I know the political knowledge and capacity of such kids. They should be given all encouragement if they are selecting a career as an elected member of the legislature by the people. After all, she is a women and a mother. They have the ability to “listen”, also listen to the people and feel for them honestly.
    Noor Nizam - Political Communication Researcher, Former SLFP District Organizer - Trincomalee District, SLFP Stalwart since 1969 and Convener - "The Muslim Voice"

    ReplyDelete

Powered by Blogger.