Header Ads



முனாபிக்காக செயற்பட்ட முஸ்லிம் அமைச்சர் - பதுங்கிக் கொண்ட முஸ்லிம் எம்.பி.

மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பில்  முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையேயும் ஓரளவு பரபரப்பு காணப்பட்டது.

அகில இலங்கை ஐம்மியத்த உலமாவானது மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு பாதகமானது என்ற அபாய சமிச்சையை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு விடுத்திருந்த போதிலும், முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இதுதொடர்பில் முனாபிக் தனமாக செயற்பட்டதாக அறியவருகிறது.

எப்படியேனும் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதிலேயே அவர் குறியாக இருந்துள்ளதுடன், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இதனை தாமதிக்குமாறு சொல்லியும் அவர் அதை நிராகரித்துள்ளார். முஸ்லிம் அமைச்சரின் செயற்பாடுகள் முனாபிக் தனமாக விளங்கியதாக அறியவருகிறது.

அதேவேளை யானைக்கும் ரணிலுக்கும் நெருக்கமான முஸ்லிம் எம்.பி. ஒருவரை நேற்று நாடாளுமன்றத்தில் காணவில்லை என சொல்லப்படுகிறது.

முஸ்லிம் கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தை எதிர்த்து விடுமோவென்ற அச்சத்தினால் அவர் தனது கையடக்க தொலைபேசியை ஓப்  செய்துவிட்டு, ஒளிந்து கொண்டுள்ளார். 

எனினும் முஸ்லிம் கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகத்தான்  வாக்களிக்கப் போகின்றன என்பதை அறிந்து கொண்டே பிறகே அந்த முஸ்லிம் எம்.பி. இறுதி நேரத்தில் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளார். 

குறித்த  முஸ்லிம் எம்.பி.க்கு அவரது கட்சித் தலைமை மிக  நன்றாக திட்டியதாகவும் அறியவருகிறது.

No comments

Powered by Blogger.