Header Ads



கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கு, கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கண்டித்துள்ளதுடன் கருக்கலைப்பு சட்டத்தை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பது மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் பேரவை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டு அமர்வில் இது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் எக்காரணத்திற்காகவும் கருக்கலைப்பு சட்டம் அமுலாக்கப்படக்கூடாது. ஒருவரின் உயிர்வாழ்வு அவரது கருத்தரிக்கும் நிமிடத்திலிருந்து ஆரம்பமாகிறது என்பது திருச்சபையின் நம்பிக்கையாகும். அது ஒரு புனிதமான  செயற்பாடு.

மனித உயிரை இல்லாதொழிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்றும் ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

கருக்கலைப்பானது மிலேச்சத்தனம் மற்றும் ஒழுங்கீனமான செயலாகும். இந்தவகையில் கருக்கலைப்பு எனும் பெயரில் இடம்பெறும் கொலையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இதற்கு உறுதுணையாகவிருக்கும் பெற்றோர் மட்டுமன்றி இதற்கு உதவி செய்யும் டாக்டர்கள் சட்டங்களை அமுலாக்கும் அரசியல்வாதிகள் அதற்கு அனுசரணை வழங்கும் ஊடகங்கள் இதற்கு ஆதரவாக செயற்படும் மக்கள் அமைப்புகள் இப்பாவத்திற்கு உரித்தானவர்களாவர்.

அதேவேளை இப்பாவத்திலிருந்து மக்களை மீட்பதற்கு உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளாதிருக்கும் ஆயர்கள் குருக்கள், பொது நிலையினர் ஆகிய அனைவருமே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் ராஜித மறுப்பு

கருக்கலைப்பை சட்ட ரீதியாக்குவது தொடர்பில் நிபுணர்களால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர அது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கை பராஜன்ம சங்கத்தின் அமர்வில் இது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டதாகவும் கருக்கலைப்பு சட்டமாக்குதல் தொடர்பில் இரண்டு முக்கிய விடயங்கள் அவ்வமர்வில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி சங்கத்தினரால் தெரிவிக்கப்பட்ட இரண்டு ஆலோசனைகளும் இதுவரை சுகாதார அமைச்சுக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் அமைச்சரவைக்கு அந்த யோசனைகள் சமர்ப்பிக்கப்படும்.

No comments

Powered by Blogger.