Header Ads



பாகிஸ்தானுன்கு நன்றி கூறிய ஜனாதிபதி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கஹாகான் அபாசிக்கும் இடையில், நியூயோர்க்கில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ள இரண்டு நாடுகளின் தலைவர்களும், நேற்று ஐ.நா தலைமையகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

தீவிரவாதம், இயற்கை அனர்த்தங்களால் சிறிலங்கா நெருக்கடிகளை எதிர்கொண்ட போது, பாகிஸ்தான் வழங்கிய உதவிகளுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தச் சந்திப்பின் போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன், இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை இருநாடுகளின் தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி, ‘சிறிலங்காவை மிகமுக்கியத்துவம் வாய்ந்த நாடாக பாகிஸ்தான் கருத்தில் கொண்டுள்ளதாகவும், சிறிலங்காவுடன், இருதரப்பு உறவுகளுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“சார்க் அமைப்பின் மிக முக்கியமான நாடாக சிறிலங்காவை நாங்கள் நம்புகிறோம். பிராந்திய அமைப்பில் சிறிலங்கா முக்கியமான பங்கை ஆற்ற முடியும். சிறிலங்காவுடன் வர்த்தக மற்றும் பொருளாதைார உறவுகளை மேலும் விரிவாக்கிக் கொள்ள நாம் விரும்புகிறோம்” என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.