Header Ads



சல்மா ஹம்சாவின் துணிச்சல், முஸ்லிம் அமைப்புகளுக்கும் வரட்டும்..!


மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்படுவதை கண்டித்து காத்தான்குடியில் பெண்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.

இது குறித்து பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா கருத்துத் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் பெண்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தின் இறுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்குமான மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற்குறிப்பு - கொழும்பில் பல முஸ்லிம் அமைப்புகள் செய்படுகின்றன. எனினும் இம்முறை எந்தவொரு அமைப்பும் ரோஹின்யா உறவுகளுக்கு ஆதரவாக வீதிக்கு வராமை குறிப்பிடத்தக்கது..?

4 comments:

  1. இந்தப் பெண்ணின் கவலையும் கரிசனையும் வரவேற்கத்தக்கது, இதற்கான வழி முறையை இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது. முதலில் எம் இரத்த உறவுகளான அந்த முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடத்தில் நோன்பு வைத்து விசேசமாக தஹஜ்ஜுத் தொழுகையில் அல்லாஹ்விடத்தில் முறையிட்டு உதவியை நாட வேண்டும். அதன் பின் சம்மந்தப்பட்ட அரசியல் அதிகாரிகளுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து அந்நாட்டு அரசுக்கும் அழுத்தம் கொடுத்து எம் இரத்த உறவுகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுதான் ஒரு இஸ்லாமியனாக நாம் செய்ய வேண்டியது.
    அதை விடுத்து பெண்களை வீதியில் இறக்கி அல்லாஹ் விரும்பாததும், எச்சரிக்கை செய்ததுமான ஒரு செயலை செய்து, வேண்டும் என்றால் ஊருக்கு பேருக்கு காட்ட முடியும் ஆனால் இந்த தவறான செயலால் ஒரு போதும் அல்லாஹ்வின் உதவியைப் பெற முடியாது.
    எனவே தயவு செய்து முஸ்லிம் பெண்கள் அமைப்பு என்ற பெயரில் எந்தப் பெண்களையும் வீதியில் இறக்கி போராட வேண்டாம் என் மிகவும் வினயமாக வேண்டிக்கொள்கின்றேன். (முற்றும்)

    ReplyDelete
  2. Mr அபூ அப்துல்லாஹ் "அல்லாஹ் விரும்பாததும் எச்சரிக்கை செய்ததுமான செயல்" என்ரு எதனடிப்படையில் சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  3. Better not to cross the borders of Sharia. Why women are disgraced by sending to road ?

    ReplyDelete

Powered by Blogger.