Header Ads



சிங்கள - முஸ்லிம் மக்கள் விக்னேஸ்வரனை இனவாதியாகவே பார்க்கின்றார்கள் - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு சிங்கள மக்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் எதிர்ப்பே உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு சீ.வி.விக்னேஸ்வரன் மீது நல்ல மதிப்பு கிடையாது எனவும், இதை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் இன ரீதியாக பாகுபடுத்தப்பட்டு வருகின்றன. பகுதி நேரமாக தொண்டர் ஆசிரியர்களாக சிங்களவர் பலர் இருக்கின்ற போதும், இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வடக்கில் சிறுபான்மையினராக காணப்படும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல மதிப்பு இல்லை. இவரை ஒரு இனவாதியாகவே பார்க்கின்றார்கள் என சுட்டிக்காட்டினார்.

இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகும் எனவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Replies
    1. When you talk on behalf of the community you belong you are branded as racist by other communities. This is why we are far behind to other developed countries. If not we could have gone well above Singapore which took CEYLON as a model to develop their country in 1960. We were well ahead of them in 1960. Most of the Srilankan leaders are talking generalism keeping the racism inside.

      Delete
  2. Replies
    1. கிழக்கு CM மாதிரி பயாந்தாங்கொள்ளியாக இருக்க சொல்லுகிறீர்களா?
      பின்னர், வடக்கிலும் சட்ட விரோத குடியேற்றங்கள் பெருகிவிடும்

      Delete

Powered by Blogger.