Header Ads



பங்களாதேஷ் வரும் ரோஹின்யர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, காரணத்தை ஆராயும் தொண்டு அமைப்புக்கள்

மியன்மாரில் இருந்து அடைக்கலம் பெறும் ரொஹிங்கிய முஸ்லிம்களின் எண்ணிக்கை கடந்த இரு தினங்களாக குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சி கண்டிருப்பதாக பங்களாதேஷில் உள்ள ஐ.நா நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் அகதிகளின் வருகை நின்று விட்டதாக மிக விரையாக கூற முடியாது என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அகதிகளின் வருகை குறைவதற்கான காரணம் பற்றி தற்போது ஆராயப்பட்டு வருவதாக தொண்டு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி தொடக்கம் மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கையால் 400,000 க்கும் அதிகமான ரொஹிங்கிய மக்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

எல்லை கடந்த புதிய வருகைகள் பெரும்பாலும் நின்றுவிட்டதாக பங்களாதேஷ் எல்லை காவலர்கள் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டனர்.

“கடந்த சில தினங்களில் எந்த ஒரு ரொங்கியரின் வருகையையும் எமது காவலர்கள் பார்க்கவில்லை” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.