Header Ads



தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு நான் இந்த அரசாங்கத்துடன் செயற்படுவேன் - சந்திரிகா

மூன்று இனங்களும் ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் வாழும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தான் என்றும் பக்கபலமாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தினால் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, சமூக, பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண மக்களின் உடமைகள், வளங்கள் மற்றும் உயிர்கள் எந்த அளவு அழிந்திருக்கின்றது என்பதை நான் அறிவேன்.

தற்போது அரசு தீர்மானித்திருக்கின்றது, உட்கட்டமைப்பு ரீதியாகவும், மனிதவள வாழ்வாதார ரீதியாவும் மக்களை கட்டியெழுப்ப வேண்டும் என்று. இதில் தற்போதய அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


இப்போது நாங்கள் உங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் சில முயற்சிகளை செய்து வருகின்றோம்.

இந்த நாட்டில் தொடர்ந்தும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்வதற்கும் நான் இந்த அரசாங்கத்துடன் செயற்படுவேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.