Header Ads



"அலரி மாளிகையும், ஜனாதிபதி செயலகமும் திருடர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இடங்கள்"

அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து, நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சித்த வேலைத்திட்டமானது தற்போது பௌத்த பிக்குமார் பிண்ட பாத்திரங்களை ஏந்தும் நிலைமை வரை வியாபித்துள்ளது என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று -13-  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அலரி மாளிகையும், ஜனாதிபதி செயலகமும் திருடர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் இடங்கள்.

இதனால், பழைய திருடர்கள் வழமைப் போலவும், புதிய திருடர்கள் பழைய திருடர்களின் வழியும் சென்று கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இரண்டு இடங்களாலும் காப்பாற்ற முடியாது போன திருடர்கள் சிறைக்கு சென்றதும் பிண்ட பாத்திரம் ஏந்தி அவர்களை பாதுகாக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது.

எனினும் கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் திருடர்களுக்கு சட்டத்தை அமுல்படுத்தினால், அவர்களை காப்பாற்ற பல நூறு ஆண்டுகளுக்கு பிண்ட பாத்திரம் ஏந்த வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.